இதான் சிஎஸ்கே மேஜிக்.. துபே சொல்றது உண்மை தான்.. ஆர்சிபி அணியில் அது இல்லை.. ஏபிடி பேட்டி

Ab De Villies Dube
- Advertisement -

கலைகட்டி வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளது. இந்த வருடம் எம்எஸ் தோனி வருங்காலத்தை கருத்தில் கொண்டு சிஎஸ்கே கேப்டன்ஷிப் பதவியை ருதுராஜ் கையில் ஒப்படைத்தார். அவருடைய தலைமையில் ரச்சின் ரவீந்திரா, சிவம் துபே போன்ற இளம் வீரர்களுடன் அசத்தும் சென்னை புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ஜொலித்து வருகிறது.

முன்னதாக மும்பையை சேர்ந்த இளம் வீரர் சிவம் துபே கடந்த கடந்த 2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியில் அறிமுகமாகி அப்படியே இந்தியாவுக்காகவும் அறிமுகமானார். இருப்பினும் அந்த வாய்ப்பில் சுமாராக செயல்பட்டதால் கழற்றி விடப்பட்ட அவரை பெங்களூரு நிர்வாகமும் கழற்றி விட்டது.

- Advertisement -

சிஎஸ்மே மேஜிக்:
அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணியிலும் பெஞ்சிலேயே இருந்த அவர் 2022இல் சென்னை அணிக்காக வாங்கப்பட்டார். அங்கே தோனி தலைமையில் 2023 சீசனில் தனது கேரியரிலேயே உச்சகட்டமாக 35 சிக்ஸருடன் 418 ரன்களை அடித்த அவர் 5வது கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். அதன் காரணமாக இந்திய அணியிலும் கம்பேக் கொடுத்துள்ள சிவம் துபே 2024 ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

குறிப்பாக குஜராத்துக்கு எதிரான போட்டியில் 51 (23) ரன்கள் அடித்த அவர் ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார். அந்தப் போட்டியின் முடிவில் மற்ற அணிகளை விட சிஎஸ்கே அணையில் தமக்கு முழுமையான சுதந்திரம் கொடுக்கப்படுவதாலேயே இந்தளவுக்கு சிறப்பாக விளையாட முடிவதாக சிவம் துபே தெரிவித்திருந்தார். இந்நிலையில் சிவம் துபே சொல்வது போல ஆர்சிபி அணியில் அவர் எப்போதும் சுதந்திரமாக உணரவில்லை என்று முன்னாள் வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “சிவமை இப்படி பார்ப்பது அருமையாக இருக்கிறது. ஆர்சிபி உடைமாற்றும் அறையில் அவர் எப்போதும் சுதந்திரமாக இருந்ததில்லை. அந்த சமயத்தில் கூச்சமுடைய பையனாக இருந்த அவர் கடினமாக வேலை செய்து கொண்டே நிறைய கேள்விகளை கேட்பார். அங்கே அவர் கொஞ்சம் கற்றுக் கொண்டார் என்று நினைக்கிறேன். ஆனால் அங்கே அவர் எப்போதும் கச்சிதமாக உணர்ந்ததில்லை என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க: ரஷீத் கானையே முதல் பந்தில் சிக்ஸ் அடிக்கனும்னா அதுக்கு தனியா தெரியம் வேணும்.. இளம்வீரரை பாராட்டிய – மைக் ஹசி

“அவர் சிஎஸ்கே அணியில் சுதந்திரமாக இருப்பதை பற்றி பேசினார். அது தான் தோனி, ருதுராஜ், ஸ்டீபன் பிளமிங் மற்றும் கடந்த கால தோழர்கள் அங்கே அமைத்த மேஜிக் செய்முறை. அது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சீசனிலும் புதிய வீரர்கள் தங்களுக்கு தாங்களே சுதந்திரமாக செயல்படுவதற்கான வாய்ப்பை கொடுக்கும் பணிக்குதிரையைப் போன்ற அணியாகும்” என்று கூறினார்.

Advertisement