ரஷீத் கானையே முதல் பந்தில் சிக்ஸ் அடிக்கனும்னா அதுக்கு தனியா தெரியம் வேணும்.. இளம்வீரரை பாராட்டிய – மைக் ஹசி

Hussey-and-Rizvi
- Advertisement -

கடந்த டிசம்பர் மாதம் துபாயில் நடைபெற்ற 2014-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மினி ஏலத்தின் போது சென்னை அணிக்காக 20 வயதே நிரம்பிய இளம் அதிரடி ஆட்டக்காரரான சமீர் ரிஸ்வியை 8 கோடியே 40 லட்ச ரூபாய்க்கு சி.எஸ்.கே அணி ஏலத்தில் எடுத்தது. இப்படி ஐபிஎல் தொடரில் விளையாடாத ஒரு இளம் வீரருக்கு இவ்வளவு பெரிய தொகையை சிஎஸ்கே அணி வழங்கியது மிகப்பெரிய அளவில் ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.

அதோடு சிஎஸ்கே அணிக்காக எந்த வீரர் தேர்வு செய்யப்பட்டாலும் சில ஆண்டுகள் பெஞ்சில் அமர வைக்கப்பட்டு அதன் பின்னர் அவரது திறமையை நிரூபித்த பின்னரே பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் சமீர் ரிஸ்வி சென்னை அணியில் இணைந்த அறிமுகப் போட்டியிலேயே வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

அப்படி இரண்டு போட்டிகளில் இதுவரை விளையாடும் வாய்ப்பினை பெற்ற சமீர் ரிஸ்வி இரண்டாவது போட்டியின் போது முதல் முறையாக பேட்டிங் செய்யும் வாய்ப்பினை பெற்றார். அந்த வகையில் நேற்று குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சமீர் ரிஸ்வி 6 பந்துகளை சந்தித்து 2 சிக்ஸர்களுடன் 14 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அதிலும் குறிப்பாக களமிறங்கிய முதல் பந்திலேயே ரஷீத் கான் ஓவரில் சிக்ஸரை அடித்து அசத்தினார். அதோடு அந்த ஓவரின் இறுதிப்பந்திலும் சிக்ஸ் அடித்த அவர் மிகச் சிறப்பான அதிரடியை வெளிப்படுத்தி இருந்தார். இதன் காரணமாக அவர் மீதான எதிர்பார்ப்பும் தற்போது அதிகரித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் அவரது இந்த மிகச் சிறப்பான பேட்டிங்கை பாராட்டியுள்ள சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கல் ஹசி சமீர் ரிஸ்வியின் ஆட்டம் குறித்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இயற்கையாகவே அவரிடம் அதிரடியாக விளையாடும் திறமை உள்ளது. பயிற்சியின்போது அவரை கவனித்தோம். ஸ்பின்னர்களுக்கு எதிராக அவர் மிகச் சிறப்பான அட்டாக்கிங் பேட்டிங்கை அவர் மேற்கொள்கிறார்.

இதையும் படிங்க : இதெல்லாம் கம்மி.. பாண்டியாவுக்கு வான்கடே மைதானத்தில் தான் சம்பவம் காத்திருக்கு.. எச்சரித்த மனோஜ் திவாரி

அதோடு அவரால் பந்தை சரியாக டைம் செய்ய முடிகிறது. அதனால் பெரிய ஷாட்களையும் விளையாட முடிகிறது. டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய பவுலரான ரஷீத் கானுக்கு எதிராக முதல் போட்டியின் முதல் பந்திலேயே ஒருவர் அட்டாக் செய்ய வேண்டுமெனில் அதற்கு தனி தைரியம் வேணும். அந்த வகையில் ரிஸ்வியின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. குறிப்பாக அவர் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட ஆர்வமாக காத்திருக்கிறார். அவருக்கு கொஞ்சம் கூட பயமில்லை அதன் காரணமாகவே அவரால் சுதந்திரமாக விளையாட முடிகிறது என ஹசி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement