இதெல்லாம் கம்மி.. பாண்டியாவுக்கு வான்கடே மைதானத்தில் தான் சம்பவம் காத்திருக்கு.. எச்சரித்த மனோஜ் திவாரி

Manoj Tiwari
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இம்முறை ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடி வருகிறது. குறிப்பாக 5 கோப்பைகளை வென்று கொடுத்து வெற்றிகரமான அணியாக ஜொலிப்பதற்கு முக்கிய காரணமாக திகழும் ரோஹித் சர்மாவை கழற்றி விட்ட மும்பை வருங்காலத்தை கருத்தில் கொண்டு ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது. ஆனால் அந்த முடிவு பெரும்பாலான மும்பை ரசிகர்களிடமே வரவேற்பை பெறவில்லை.

அந்த சூழ்நிலையில் நடைபெற்ற குஜராத்துக்கு எதிரான முதல் போட்டியில் கடைசி 5 ஓவரில் 7 விக்கெட்டுகள் கைவசம் இருந்தும் 43 ரன்கள் அடிக்க முடியாத மும்பை 6 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. அதனால் ஹர்திக் பாண்டியா தலைமையில் முதல் போட்டியிலேயே தோற்ற மும்பை வரலாற்றில் 2012க்குப்பின் 12வது முறையாக ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் தோல்வியை பதிவு செய்தது.

- Advertisement -

மும்பையில் சம்பவம்:
அதை விட இந்தியாவுக்காக 100% போட்டிகளில் விளையாடாமல் பணத்துக்காக அனைத்து ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடும் பாண்டியா கடந்த வருடம் வரை குஜராத்தில் விளையாடி விட்டு தற்போது மும்பைக்காக விளையாடுகிறார். அதனால் அகமதாபாத் நகரில் கடந்த முதல் போட்டியிலேயே மைதானத்தில் இருந்த மொத்த ரசிகர்களும் சேர்ந்து பாண்டியாவுக்கு எதிராக கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தது கெவின் பீட்டர்சன் போன்ற பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இந்நிலையில் வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 2வது போட்டியில் ரோஹித்தை நீக்கியதற்காக மும்பை ரசிகர்களே பாண்டியாவுக்கு எதிராக அதிக சத்தமாக கூச்சலிட்டு எதிர்ப்பை தெரிவிக்கப் போவதாக மனோஜ் திவாரி கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “மும்பையில் அவர் எப்படி வரவேற்கப்படுகிறார் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். ஏனெனில் இங்கே அவருக்கு எதிராக அதிக சத்தத்துடன் கோஷங்கள் காணப்படலாம்”

- Advertisement -

“ஏனென்றால் ஒரு மும்பை ரசிகராக, ரோஹித் சர்மாவின் ரசிகராக கேப்டன்ஷிப் பொறுப்பு பாண்டியாவிடம் ஒப்படைக்கப்பட்டததை யாரும் எதிர்பார்க்கவில்லை. 5 கோப்பைகளை வென்று கொடுத்தும் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை இழந்துள்ளார். அதற்கான காரணம் என்னவென்று எனக்குத் தெரியாது. அது ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை”

இதையும் படிங்க: 8.40 கோடி வீண் போகல.. ரசித் கானை பொளந்த ரிஸ்வி.. அரிதான பட்டியலில் 2வது வீரராக சாதனை

“அதற்கான ரியாக்சனை தான் நீங்கள் களத்தில் பார்க்கிறீர்கள். ஒருவேளை ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டாலும் அவர் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்காக உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் அனைத்து வீரர்களும் ஃபிட்டாகி இந்தியாவுக்காக விளையாட தயாராக இருப்பது அவசியம். அதிலும் நம்பர் ஒன் ஆல் ரவுண்டரான அவர் ஃபார்முக்கு திரும்பி நன்றாக செயல்படுவது அவசியம்” என்று கூறினார்.

Advertisement