8.40 கோடி வீண் போகல.. ரசித் கானை பொளந்த ரிஸ்வி.. அரிதான பட்டியலில் 2வது வீரராக சாதனை

Rizvi vs Rashid Khan
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 டி20 தொடரில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக சேப்பாக்கத்தில் மார்ச் 26ஆம் தேதி நடைபெற்ற குஜராத்துக்கு எதிரான போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சென்னை புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியது.

அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய சென்னை கேப்டன் சிவம் துபே 46, ரச்சின் ரவீந்திரா 46, சிவம் துபே 51 ரன்கள் அடித்த உதவியுடன் 207 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதை சேசிங் செய்த குஜராத்துக்கு அதிகபட்சமாக சாய் சுதர்சன் 37 ரன்கள் எடுத்தும் மற்ற வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறியதால் போராடாமலேயே தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

அரிதான பட்டியல்:
முன்னதாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளம் வீரர் சமீர் ரிஸ்வி இந்த வருடத்திற்கான ஏலத்தில் 8.40 கோடி மிகப்பெரிய தொகைக்கு சென்னை அணிக்காக வாங்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. ஏனெனில் பொதுவாகவே நட்சத்திர வீரர்களையும் குறைந்த தொகைக்கு வாங்கக்கூடிய சென்னை நிர்வாகம் இதுவரை இந்தியாவுக்காகவும் ஐபிஎல் தொடரிலும் விளையாடாத அவரை பெரிய தொகை கொடுத்து வாங்கியது.

அந்த சூழ்நிலையில் அறிமுகமான அவர் முதல் போட்டியில் பேட்டிங் செய்வதற்கான வாய்ப்பு பெறவில்லை. இருப்பினும் குஜராத்துக்கு எதிரான 2வது போட்டியில் கடைசி நேரத்தில் களமிறங்கிய அவர் தன்னுடைய கேரியரின் முதல் பந்திலேயே ரசித் கானுக்கு எதிராக சிக்சர் பறக்க பறக்க விட்டது ரசிகர்களையும் தோனி உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. ஏனெனில் உலகின் நம்பர் ஒன் டி20 பவுலராக கருதப்படும் ரசித் கானுக்கு எதிராக விராட் கோலி உள்ளிட்ட பல டாப் பேட்ஸ்மேன்கள் தடுமாறுவது வழக்கமாகும்.

- Advertisement -

ஆனால் அவரையே அசால்டாக அடித்த ரிஸ்வி 14 (6) ரன்கள் விளாசி தன்னுடைய கேரியரை அட்டகாசமாக துவங்கினார். சொல்லப்போனால் இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் தன்னுடைய கேரியரின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்த 9வது வீரர் மற்றும் 2வது சிஎஸ்கே வீரர் என்ற சாதனையும் ரிஸ்வி படைத்துள்ளார். இதற்கு முன் ராப் குயின்னி, கெவோன் கூப்பர், ஆண்ட்ரே ரசல், கார்லஸ் ப்ரத்வெய்ட், அன்கிட் சௌத்ரி, ஜவோன் சீர்லெஸ், சித்தேஷ் லாட், மஹீஸ் தீக்சனா ஆகியோரும் தங்களுடைய ஐபிஎல் கேரியரின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்துள்ளனர்.

இதையும் படிங்க: இவரை பாத்தா 42 வயசான மாதிரியா தெரியுது? இவரு ரிட்டயர்டு ஆகவே கூடாது – ரசிகர்கள் கருத்து

அதில் மஹீஸ் தீக்சனாவுக்கு பின் இரண்டாவது சிஎஸ்கே வீரராக ரிஸ்வி இந்த அரிதான சாதனையைப் பட்டியலில் இணைந்துள்ளார். மேலும் அன்கிட் சௌத்ரி, சித்தேஷ் லாட் ஆகியோருக்கு பின் சிக்சருடன் ஐபிஎல் கேரியரை துவங்கிய 3வது வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார். அந்த வகையில் ரசித் கானை முதல் பந்தில் அடித்ததற்காகவே இவருக்கு 8.4 கோடிகள் கொடுத்தது வீண் போகவில்லை என்று சிஎஸ்கே ரசிகர்கள் பாராட்டுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement