இவரை பாத்தா 42 வயசான மாதிரியா தெரியுது? இவரு ரிட்டயர்டு ஆகவே கூடாது – ரசிகர்கள் கருத்து

MS-Dhoni
- Advertisement -

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 7-வது லீக் போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்திய சிஎஸ்கே அணி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. அதோடு புதிய கேப்டன்சி மாற்றத்திற்கு பிறகு சென்னை அணி எவ்வாறு செயல்படும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் முதல் இரண்டு போட்டிகளிலும் அசத்தலான ஆட்டத்தை சிஎஸ்கே அணி வெளிப்படுத்தி உள்ளது ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டினை பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக 42 வயதான சென்னை அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி தனது கேப்டன் பதவியை ருதுராஜிடம் கொடுத்தது பலரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

ஏனெனில் தற்போது 42 வயதாகும் தோனிக்கு இந்த ஐபிஎல் தொடரே கடைசி சீசனாக பார்க்கப்படுகிறது. இந்த சீசனின் இறுதி தருவாயில் அவர் ஓய்வை அறிவிப்பார் என்பதனால் சாம்பியன் கேப்டனாகவே அவர் ஓய்வு பெற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இவ்வேளையில் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்திருந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்று அதிகம் பேசப்பட்டு வரும் வேளையில் வயதாக வயதாக தோனியின் செயல்பாடும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடருக்கு பிறகு தற்போது கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் கழித்து கிரிக்கெட் களத்திற்கு திரும்பியுள்ளார்.

- Advertisement -

நேற்றைய போட்டியில் விக்கெட் கீப்பிங்கில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி அசத்தினார். அதிலும் குறிப்பாக 42 வயதான தோனி நேற்று விஜய் சங்கரின் கேட்சை டைவ் அடித்து பிடித்தது பலருக்கும் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு களத்தில் வேகமாக விரைவான விக்கெட் கீப்பிங் செய்யும் திறனையும் அவர் வெளிப்படுத்தி வருகிறார்.

இதையும் படிங்க : 8.40 கோடி எதுக்கு கொடுத்தாங்கனு இப்போ தெரியுதா? அசரவைத்த சமீர் ரிஸ்வி – விவரம் இதோ

இதன் காரணமாக ரசிகர்கள் பலரும் தோனிக்கு 42 வயது என்றால் நம்பவே முடியவில்லை. அவர் ரிட்டயர்டு ஆகாமல் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோன்று சுரேஷ் ரெய்னாவும் தோனி வயதாக வயதாக இன்னும் சிறப்பாக விளையாடி வருகிறார் என்றும் அவர் தொடர்ச்சியாக மற்றவர்களை ஊக்குவித்து வருகிறார் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement