8.40 கோடி எதுக்கு கொடுத்தாங்கனு இப்போ தெரியுதா? அசரவைத்த சமீர் ரிஸ்வி – விவரம் இதோ

Rizvi
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஒவ்வொரு சீசனின் போதும் ஒரு இளம்வீரர் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளில் ருதுராஜ் கெய்க்வாட், ரிங்கு சிங், திலக் வர்மா என நட்சத்திர வீரர்கள் கிடைத்து வரும் வேளையில் இந்த ஆண்டு சிஎஸ்கே அணியின் இளம் அதிரடி வீரரான சமீர் ரிஸ்வி கிடைத்துள்ளார் என்று ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

ஏனெனில் 20 வயது மட்டுமே நிரம்பிய சமீர் ரிஸ்வி இதுவரை ஒரு ஐபிஎல் போட்டியில் கூட விளையாடாமல் இருந்த வேளையிலேயே அவரை சென்னை அணி 8 கோடியே 40 லட்ச ரூபாய் என்ற பெரிய தொகை கொடுத்து ஏலத்தில் எடுத்தது.

- Advertisement -

பொதுவாகவே சென்னை அணி தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வீரரும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவார்கள் என்று பேசப்பட்டு வரும் வேளையில் இதுவரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடாத அவரை அணியில் எடுத்த சி.எஸ்.கே மிகப்பெரிய தொகை கொடுத்ததோடு மட்டுமின்றி தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளிலும் வாய்ப்பையும் கொடுத்துள்ளது.

அந்த வகையில் தான் அறிமுகமான போட்டியில் பேட்டிங் செய்ய களமிறங்காத அவர் நேற்றைய போட்டியில் பேட்டிங் செய்ய களமிறங்கி 6 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 14 ரன்கள் குவித்து அசத்தினார். அதிலும் குறிப்பாக இவரை எட்டு கோடி கொடுத்து ஏலத்தில் எடுக்க என்ன காரணம் என்பதையும் அவர் நேற்றைய போட்டியில் வெளிகாட்டியிருந்தார்.

- Advertisement -

அதாவது ஐபிஎல் போட்டியில் அறிமுகமான முதல் பந்திலேயே அதுவும் ரஷீத் கான் போன்ற உலகின் தலைசிறந்த ஸ்பின்னரை எதிர்கொண்ட வேளையில் முதல் பந்தியிலேயே சிக்ஸ் அடித்த அவர் அதே ஓவரில் மற்றொரு சிக்ஸரையும் அடித்து பிரமிக்க வைத்தார். 19-ஆவது ஓவரில் பேட்டிங் செய்ய கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய அவர் அதிரடியாக இரண்டு சிக்ஸர்களை அடித்தது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.

இதையும் படிங்க : சிஎஸ்கே வந்ததும் துபே ஆளே மாறிட்டாரு.. அந்த டீம்லயும் ஒளிமயமான எதிர்காலம் இருக்கு.. மோஹித் சர்மா பாராட்டு

சென்னை அணிக்காக ஏற்கனவே மிடில் ஆர்டரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரெய்னா போன்று இவரும் அதிரடி வீரர் என்பதனால் இவரை வலதுகை ரெய்னா என்றும் பலரும் கூறி வந்த வேளையில் அதனை நிரூபிக்கும் வகையில் நேற்றைய போட்டியில் சமீர் ரிஸ்வி தனது அதிரடியை வெளிப்படுத்தி அவரது தேர்வை நியாயப்படுத்தியுள்ளார்.

Advertisement