சிஎஸ்கே வந்ததும் துபே ஆளே மாறிட்டாரு.. அந்த டீம்லயும் ஒளிமயமான எதிர்காலம் இருக்கு.. மோஹித் சர்மா பாராட்டு

Mohti Sharma
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 2024 சீசனில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே கிரிக்கெட் அணி இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் 2 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக மார்ச் 26ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் குஜராத்தை 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை தோற்கடித்தது. அதனால் குஜராத்துக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணியாகவும் சென்னை சாதனை படைத்தது.

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை கேப்டன் ருதுராஜ் 46, ரச்சின் ரவீந்திரா 46, சிவம் துபே 51 ரன்கள் எடுத்த உதவியுடன் 207 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. ஆனால் அதைச் சேசிங் செய்த குஜராத் தடுமாற்றமாக விளையாடி 143 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 37 ரன்கள் எடுக்க சென்னைக்கு அதிகபட்சமாக முஸ்தஃபிஸூர் ரஹ்மான், தீபக் சஹர், துஷார் தினேஷ் பாண்டே தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

முன்னேறிய துபே:
இந்த வெற்றிக்கு 2 பவுண்டரி 5 சிக்சர்களைப் பறக்க விட்டு 51 (23) ரன்களை அடித்து முக்கிய பங்காற்றிய சிவம் துபே ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். பெங்களூரு, ராஜஸ்தான் போன்ற அணிகளில் தடுமாறிய அவர் சென்னை அணிக்கு வந்தது முதல் சிறப்பாக விளையாடி கடந்த வருடம் 5வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றி தற்போது இந்திய அணியிலும் கம்பேக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் சென்னை அணியில் துபே நம்ப முடியாத அளவுக்கு முன்னேற்றத்தை சந்தித்துள்ளது இந்திய அணிக்கு சாதகம் என்று மோகித் சர்மா பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சிவம் துபே கடந்த சில சீசன்களாக தனக்குத்தானே முன்னேறியதற்காக நிறைய பாராட்டுகளை பெறுவதற்கு தகுதியானவர். இது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லதாகும். ஏனெனில் அடுத்ததாக பெரிய தொடர்கள் வருகிறது”

- Advertisement -

“இது சிஎஸ்கே அணிக்கும் நல்லதாகும். பேட்ஸ்மேனுக்கு எதிராக திட்டத்தை உருவாக்கும் போது நீங்கள் பேட்ஸ்மேனை விட ஒரு படி மேலே இருக்க வேண்டும். துபே போன்றவர் முதலில் யார்க்கர் பந்து வந்தால் அடுத்ததாக ஸ்லோயர் பவுன்சர் வந்து வரும் என்பதில் நல்ல விழிப்புணர்வை கொண்டுள்ளார். போட்டி துவங்குவதற்கு நாங்கள் முன்பாக பேசிக் கொண்டிருந்தோம்”

இதையும் படிங்க: நினைச்சு பாக்காத கனவு நிஜமாகிடுச்சு.. தோனி பாய் சொன்னது அந்த ஒரு அட்வைஸ் தான்.. சமீர் ரிஸ்வி பேட்டி

“அப்போது என்னுடைய வேரியேசன்களை தாண்டி உங்களால் மைதானத்தின் பெரிய பகுதியில் அடிக்க முடியாது என்று அவரிடம் நான் சொன்னேன். ஆனால் களத்தில் என்ன செய்ய வேண்டும் எதை தவிர்க்க வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். என்னை பொறுத்த வரை அது போன்ற மனநிலை உங்களுக்கு நீண்ட காலம் அவசியம். இந்த தொடரில் இதுவரை பேட்டிங் செய்த விதத்தை வைத்து எந்த அணிக்காக விளையாடினாலும் அவருக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement