நினைச்சு பாக்காத கனவு நிஜமாகிடுச்சு.. தோனி பாய் சொன்னது அந்த ஒரு அட்வைஸ் தான்.. சமீர் ரிஸ்வி பேட்டி

Sameer Rizvi
- Advertisement -

கோடை காலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 டி20 தொடரில் சிஎஸ்கே இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளது. குறிப்பாக மார்ச் 26ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சென்னை அணி குஜராத்துக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணியாக சாதனை படைத்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

முன்னதாக இந்த தொடரில் சென்னை அணிக்காக அறிமுகமான ரச்சின் ரவீந்தரா, முஸ்தபிசூர் ரஹ்மான், டேரில் மிட்சேல், சமீர் ரிஸ்வி ஆகிய நால்வருமே கிடைத்த வாய்ப்புகளில் அசத்தலாக செயல்பட்டனர். குறிப்பாக இதுவரை வேறு ஐபிஎல் அணிக்காகவும் இந்தியாவுக்காகவும் விளையாடாத உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சமீர் ரிஸ்வி 8.40 கோடிக்கு வாங்கப்பட்டு முதல் போட்டியில் அறிமுகமானார்.

- Advertisement -

நிஜமான கனவு:
இருப்பினும் முதல் போட்டியில் பேட்டிங் செய்யும் வாய்ப்பை பெறாத அவர் குஜராத்துக்கு எதிரான 2வது போட்டியில் கடைசி நேரத்தில் களமிறங்கினார். அந்த வாய்ப்பில் தன்னுடைய கேரியரின் முதல் பந்திலேயே உலகின் நம்பர் ஒன் டி20 பவுலராக கருதப்படும் ரசித் கானுக்கு எதிராக அபாரமான சிக்சரை பறக்க விட்ட அவர் அட்டகாசமான துவக்கத்தை பெற்றது தோனி உட்பட அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

அந்த வகையில் 14 (6) ரன்கள் அடித்த அவர் வருங்காலத்தில் அசத்தக்கூடிய வீரராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார். இந்நிலையில் தோனியை தம்முடைய வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்பதே கனவாக இருந்ததாக ரிஸ்வி கூறியுள்ளார். அப்படிப்பட்ட நிலையில் தோனியுடன் சேர்ந்து விளையாடும் வாய்ப்பு கிடைத்தது நினைத்து பார்க்காதது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“தோனி பாய் எனக்கு ஒரு ஆலோசனை மட்டுமே கொடுத்தார். அதாவது இதுவரை நீங்கள் எப்படி விளையாடினீர்களோ அது தான் உங்களுடைய ஆட்டம் என்று சொன்னார். அதே போலவே நீங்கள் விளையாட வேண்டும். எந்த வித்தியாசமும் கிடையாது. எப்போதும் ஒரே திறமை தான் இருக்கும். மனநிலை வேண்டுமானால் கொஞ்சம் மாறலாம். எனவே விளையாடும் போது அழுத்தத்தை உணராமல் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாட வேண்டும்”

இதையும் படிங்க: சிஎஸ்கே போட்டியில் விதிமுறையை மீறிய சுப்மன் கில்.. 12 லட்சம் அபராதம் போட்ட ஐபிஎல் நிர்வாகம்

“அப்படி செய்தாலே அழுத்தத்தை சந்திக்காமல் நீங்கள் பதற்றமடைய மாட்டீர்கள். முதல் போட்டியாக இருந்தாலும் அப்படித்தான் நீங்கள் பல வருடங்களாக விளையாடி வருகிறீர்கள். ஏலத்தில் சிஎஸ்கே அணிக்காக நான் வாங்கப்பட்ட போது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். எம்எஸ் தோனியை பார்க்க வேண்டும் என்பது என்னுடைய கனவாகும். அவருடன் விளையாடுவதை நான் நினைத்ததே கிடையாது. தற்போது என்னுடைய கனவு முழுமையடைந்துள்ளது. இந்த சீசனில் அவரிடமும் பயிற்சியாளர்களிடமும் சிலவற்றைக் கற்றுள்ளேன். எனவே அண்ணியிடமிருந்து முடிந்தளவுக்கு நிறைய கற்பதே என்னுடைய இலக்காகும்” என்று கூறினார்.

Advertisement