சிஎஸ்கே போட்டியில் விதிமுறையை மீறிய சுப்மன் கில்.. 12 லட்சம் அபராதம் போட்ட ஐபிஎல் நிர்வாகம்

Shubman Gill
- Advertisement -

கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் 20204 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை தங்களுடைய முதல் 2 போட்டிகளிலும் 2 வெற்றிகளை பெற்றுள்ளது. குறிப்பாக மார்ச் 26ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் குஜராத்தை 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை தோற்கடித்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சிவம் துபே 51, கேப்டன் ருதுராஜ் 46, ரச்சின் ரவீந்திரா 46 ரன்கள் எடுத்த உதவியுடன் 207 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

ஆனால் அதை சேசிங் செய்த குஜராத் ஆரம்பம் முதலே சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவரில் 143/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 37 ரன்கள் எடுக்க சென்னை சார்பில் அதிகபட்சமாக முஸ்தபிசுர் ரஹ்மான், தீபக் சஹார், துஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

- Advertisement -

12 லட்சம் அபராதம்:
அதனால் குஜராத்துக்கு எதிராக பெரிய வெற்றியை பதிவு செய்த அணியாக சாதனை படைத்த சென்னை புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக 30க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் மோசமான தோல்வியை பதிவு செய்தது. இந்நிலையில் இந்தப் போட்டிக்கான சம்பளத்திலிருந்து குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது

அதாவது சென்னைக்கு எதிரான இன்னிங்சில் குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 20 ஓவர்களை வீசி முடிக்கவில்லை. எனவே இந்த சீசனில் முதல் முறையாக மெதுவாக பந்து வீசிய தவறை செய்துள்ளதால் மொத்த குஜராத் அணிக்கும் அபராதம் விதிக்காமல் கேப்டனுக்கு மட்டும் 12 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் தெளிவு படுத்தியுள்ளது.

- Advertisement -

சொல்லப்போனால் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் பந்து வீசி முடிக்க தவறியதால் சென்னைக்கு எதிரான 20வது ஓவரில் உள்வட்டத்திற்கு வெளியே நின்ற ஒரு குஜராத் வீரரை குறைத்து களத்திலேயே நடுவர் தண்டனை கொடுத்தார். எனவே மேற்கொண்டு இந்த தவறை குஜராத் செய்யாமல் இருப்பதற்காக கேப்டன் சுப்மன் கில்லுக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.

இதையும் படிங்க: ரூல்ஸ் சாதகமா இல்ல.. அவர் தான் தோனி 8வது இடத்தில் பேட்டிங் செய்ற முடிவை எடுத்திருக்காரு.. ஹசி பேட்டி

அந்த வகையில் புதிய கேப்டன் கில் தலைமையில் முதல் போட்டியில் வென்றாலும் இரண்டாவது போட்டியில் குஜராத் மிகப்பெரிய தோல்வியை பதிவு செய்து பின்னடைவை சந்தித்துள்ளது. இருப்பினும் இளம் வீரரான அவர் போகப் போக கற்றுக் கொள்வார் என்றே சொல்லலாம். இதைத் தொடர்ந்து குஜராத் தங்களுடைய அடுத்த போட்டியில் மார்ச் 31ஆம் தேதி ஹைதராபாத் அணியை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement