ரூல்ஸ் சாதகமா இல்ல.. அவர் தான் தோனி 8வது இடத்தில் பேட்டிங் செய்ற முடிவை எடுத்திருக்காரு.. ஹசி பேட்டி

Mike Hussey
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. குறிப்பாக நேற்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற குஜராத்துக்கு எதிரான போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியது.

அதன் வாயிலாக புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ருதுராஜ் கைக்வாட் தலைமையில் 6வது கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் பயணத்தில் சென்னை வெற்றி நடை போட்டு வருகிறது. இருப்பினும் இந்த தொடரில் இதுவரை எம்எஸ் தோனி பேட்டிங் செய்வதை பார்க்க முடியாதது சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்து வருகிறது என்றே சொல்லலாம்.

- Advertisement -

ரசிகர்கள் ஏமாற்றம்:
கடந்த வருடமே முழங்கால் வலியால் அவதிப்பட்ட அவர் தற்போது 42 வயதை கடந்துள்ளார். அதனால் முடிந்தளவுக்கு இளம் வீரர்களுக்கு முன்கூட்டியே களமிறங்கும் வாய்ப்பை கொடுக்கும் அவர் 8வது இடத்தில் பேட்டிங் செய்யும் முடிவை எடுத்துள்ளார். ஆனால் அந்த முடிவில் இதுவரை ஒரு பந்தை கூட தோனி எதிர்கொள்ளாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

இந்நிலையில் தோனி 8வது இடத்தில் களமிறங்கும் முடிவை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்பிங் எடுத்துள்ளதாக மைக் ஹசி கூறியுள்ளார். அத்துடன் இம்பேக்ட் வீரர் விதிமுறை வந்துள்ளதால் எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன் விளையாடுவது தோனி களமிறங்குவதற்கான வாய்ப்பை மேலும் குறைப்பதாக தெரிவிக்கும் ஹசி இது பற்றி பேசியது பின்வருமாறு. “கண்டிப்பாக இது பிளமிங் வழிகாட்டுதலின் படி நடக்கிறது. இம்பேக்ட் வீரர் விதிமுறை வந்துள்ளதால் ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன் மற்றும் பவுலர் கிடைக்கின்றனர்”

- Advertisement -

“எனவே பேட்டிங் வரிசை நீள்கிறது. அதனால் எம்எஸ் தோனியை 8வது இடத்தில் நாங்கள் பெற்றுள்ளது பைத்தியக்காரத்தனமானது. தற்போது தோனி நன்றாக பேட்டிங் செய்கிறார். இருப்பினும் எங்களுடைய அணியில் ஆழமான திறமை இருக்கிறது. அதனால் உயர் வரிசையில் விளையாடும் வீரர்கள் இரு மனதுடன் இருந்தால் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் நேர்மையான பாதையில் செல்ல வேண்டும்”

இதையும் படிங்க: தோனிக்காக காத்திருந்த ரசிகர்கள்.. மைதானத்தில் ஒலித்த ஸ்பெஷல் பாடல் – சேப்பாக்கத்தை அதிரவிட்ட டிஜே

“அவர்கள் நிச்சயமாக பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டனின் ஆதரவை பெற்று முடிந்த வரை ஆட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வதை விரும்புகிறோம். அதனால் நீங்கள் அவுட்டானாலும் பரவாயில்லை. அதற்காக நீங்கள் விமர்சிக்கப்பட மாட்டீர்கள். பொதுவாக பிளம்மிங் வேகமாக விளையாடுவதை பற்றி பேசுவார். எனவே நாங்கள் வேகமாக விளையாட விரும்புகிறோம்” என்று கூறினார். இதனால் இந்த வருடம் தோனி பேட்டிங் செய்வதை பார்ப்பது அரிதாகவே இருக்கலாம் என்றால் மிகையாகாது.

Advertisement