தோனிக்காக காத்திருந்த ரசிகர்கள்.. மைதானத்தில் ஒலித்த ஸ்பெஷல் பாடல் – சேப்பாக்கத்தை அதிரவிட்ட டிஜே

Dhoni
- Advertisement -

தற்போது 42 வயதை எட்டியுள்ள சென்னை அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனிக்கு இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த 17-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது கடைசி சீசனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சீசனின் இறுதியில் அவர் ஓய்வை அறிவிப்பார் என்பதனால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இரட்டிப்பாகியுள்ளது.

மேலும் தோனி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை காண்பதற்காகவே ரசிகர்களும் நேரடியாக மைதானத்திற்கு படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனி பேட்டிங் செய்ய களமிறங்கும் போது இருக்கும் ஆரவாரம் கடந்த ஆண்டே உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து இருந்தது.

- Advertisement -

ஏனெனில் தோனி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பேட்டிங் செய்ய நடந்து வரும்போது ரசிகர்கள் கொடுக்கும் கரகோஷம் மற்றும் ஆரவாரம் ஆகியவை விண்ணை முட்டும் அளவிற்கு பிரமாண்டமாக இருக்கும்.

அதோடு தோனிக்காக ஒவ்வொரு முறையும் அவர் பேட்டிங் செய்ய வரும்போதும் ஸ்பெஷலான மியூசிக்கை மைதானத்தில் இருக்கும் டிஜே ஒலிக்க விடுவார். அந்த பாடல்கள் ரசிகர்கள் மத்தியிலும் அதிகளவு வரவேற்பினை பெறும். ஆனால் நேற்றைய போட்டியில் தோனி இறுதிவரை பேட்டிங் செய்ய வரவேயில்லை.

- Advertisement -

எப்படியாவது அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழும் தோனி பேட்டிங் செய்ய களத்திற்கு வருவார் என்று ஒவ்வொரு விக்கெட் விழும் போதும் ரசிகர்கள் எதிர்பார்த்து தோனியின் வருகைக்காக காத்திருந்தனர். அதேபோன்று தோனியும் அதற்கேற்றார் போன்று ஹெல்மெட், பேடு எல்லாம் அணிந்து கொண்டு தயாராக இருந்தார். ஆனால் இறுதிவரை அவர் பேட்டிங் செய்ய களமிறங்காமல் காத்திருந்தார்.

இதையும் படிங்க : ஷிவம் துபே அரைசதம் கடந்தபோது ஓய்வறையில் இருந்த தோனி செய்த செயல் – மனதை கவர்ந்த தருணம்

ஒரு கட்டத்தில் கடைசி ஓவரின் போது சமீர் ரிஸ்வி ஆட்டமிழந்ததும் தோனி களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது மீண்டும் ஜடேஜாவே மைதானத்திற்கு வந்ததால் மைதானத்தில் இருந்த டிஜே “காத்திருந்து, காத்திருந்து காலங்கள் போனதடி” என்று ரசிகர்களின் ஏமாற்றத்தை சரியாக பாடலாக ஒலித்ததால் அந்த பாடலுக்கும் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பெரிய வரவேற்பினை அளித்தனர். அதோடு தோனியின் முகத்தை ஒவ்வொரு முறை திரையில் காண்பித்த போதும் ரசிகர்கள் தங்களது ஆரவாரம் மூலம் மைதானத்தை அதிர வைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement