ஷிவம் துபே அரைசதம் கடந்தபோது ஓய்வறையில் இருந்த தோனி செய்த செயல் – மனதை கவர்ந்த தருணம்

Dube-and-Dhoni
- Advertisement -

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 7-ஆவது லீக் போட்டியில் விளையாடி இருந்த சிஎஸ்கே அணியானது குஜராத் அணியை 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. அதோடு ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் தொடர்ச்சியான சிறப்பான செயல்பாடு ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனைத்தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை 206 ரன்களை குவித்தது.

- Advertisement -

பின்னர் 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு மிகப்பெரிய இலக்கு குஜராத் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதை எதிர்த்து விளையாடிய குஜராத் அணியானது 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே குவித்தது.

இதன்காரணமாக சென்னை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக ஷிவம் துபே 51 ரன்களை எடுத்து அசத்தினார். களமிறங்கிய முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்டிய ஷிவம் துபே அதிரடியில் வெளுத்து வாங்கினார்.

- Advertisement -

அதன்படி நேற்று 23 பந்துகளை சந்தித்த அவர் 2 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 51 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் வெற்றிக்கு காரணமாக அமைந்ததால் அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டியின் போது ஷிவம் துபே ஒரு கட்டத்தில் மிகச் சிறப்பான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வேளையில் வெகுவிரைவாக அரை சதம் கடந்தார்.

இதையும் படிங்க : அந்த புதிய ரூல் ஹெல்ப் பண்ணுது.. அவங்க 2 பேர்ல யாரை பாக்குறதுன்னே தெரியல.. சஹர் பேட்டி

அப்போது அந்த அரைசதத்தை அவர் கொண்டாடும் வகையில் பேட்டையை உயர்த்தும்போது ஓய்வறையில் இருந்த தோனி கைதட்டி அவரை பாராட்டினார். இப்படி சிவம் துபே அரைசதத்தை கடந்ததும் தோனி கைதட்டி தோனி கொண்டாடிய வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement