அந்த புதிய ரூல் ஹெல்ப் பண்ணுது.. அவங்க 2 பேர்ல யாரை பாக்குறதுன்னே தெரியல.. சஹர் பேட்டி

Deepak Chahar 2
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 2024 சீசனில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி தங்களுடைய இரண்டாவது போட்டியில் குஜராத்தை 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மார்ச் 25ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சிவம் துபே 51, ரச்சின் ரவீந்திரா 46, கேப்டன் ருதுராஜ் 46 ரன்கள் எடுத்த உதவியுடன் 207 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

ஆனால் அதைத் துரத்திய குஜராத் ஆரம்பம் முதலே தடுமாற்றமாக விளையாடி 20 ஓவரில் 143/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சன் 37 ரன்கள் எடுக்க சென்னை சார்பில் அதிக பட்சமாக தீபக் சஹார், முஸ்தபிசுர் ரஹ்மான், துசார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

- Advertisement -

உதவும் ரூல்:
அதனால் குஜராத்துக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற சாதனையையும் சென்னை படைத்தது. முன்னதாக அந்த போட்டியில் குஜராத்தின் துவக்க வீரர்களான கேப்டன் கில் 8, சஹா 21 ரன்களில் அவுட்டாக்கிய தீபக் சஹர் தன்னுடைய பங்காற்றினார். குறிப்பாக சஹாவை பவுன்சர் பந்தால் ஹெல்மெட்டில் அடித்த அவர் அடுத்த பந்திலேயே அவுட்டாக்கி அசத்தினார்.

இந்நிலையில் ஒரு ஓவருக்கு 2 பவுன்சர்கள் வீசலாம் என்ற புதிய விதிமுறை பவுலர்களுக்கு உதவுவதாக தீபக் சஹார் கூறியுள்ளார். மேலும் முன்னாள் இந்நாள் கேப்டன்களான தோனி மற்றும் ருதுராஜ் ஆகியோரில் யாரை ஆலோசனைக்காக பார்ப்பது என்று குழம்புவதாகவும் கலகலப்பாக தெரிவிக்கும் அவர் இது பற்றி போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“சென்னை அணியில் நான் விளையாடுவதில் இருந்தே பவர் பிளே ஓவர்களில் 3 ஓவர்களை வீசி வருகிறேன். அதே சமயம் முடிந்தளவுக்கு தற்போது வந்துள்ள புதிய விதிமுறையை சுற்றி பந்து வீச முயற்சிக்கிறேன். முன்பெல்லாம் முதல் 2 – 3 பந்துகளில் நீங்கள் பவுன்சர்களை வீசினால் உடனடியாக பேட்ஸ்மேன்கள் ஃபுல் லென்த் பந்துகளுக்கு தயாராக இருப்பார்கள்”

இதையும் படிங்க: 2.27 மீட்டர்.. 0.60 நொடியில் அபார கேட்ச் பிடித்த தல தோனி.. சுரேஷ் ரெய்னா கொடுத்த மாஸ் பாராட்டு

“ஆனால் தற்போது ஓவருக்கு இரண்டு பவுன்சர்கள் வீசலாம் என்ற விதிமுறை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவுகிறது. பவுன்ஸ் இருந்தாலும் அதிகமாக பனி இல்லை. இது போன்ற சூழ்நிலைகளில் பந்து சற்று பிடித்து பவுன்ஸாகி வரும். தற்போது நான் மஹி பாய் மற்றும் ருதுராஜ் ஆகிய இருவரையுமே ஆலோசனைகளுக்காக பார்க்கிறேன். ருதுராஜ் நன்றாக அணியை வழி நடத்துகிறார்” என்று கூறினார். அந்த வகையில் 2 போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்ற சென்னை புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement