2.27 மீட்டர்.. 0.60 நொடியில் அபார கேட்ச் பிடித்த தல தோனி.. சுரேஷ் ரெய்னா கொடுத்த மாஸ் பாராட்டு

MS dhoni and raina
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய இரண்டாவது போட்டியில் குஜராத்தை 63 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. மார்ச் 25ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சிவம் துபே 51, கேப்டன் ருதுராஜ் 46, ரச்சின் ரவீந்திரா 46 ரன்கள் எடுத்த உதவியுடன் 207 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதைத் துரத்திய குஜராத் ஆரம்பம் முதலே தடுமாற்றமாக விளையாடி 20 ஓவரில் 143/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சன் 37 ரன்கள் எடுக்க சென்னை சார்பில் அதிகபட்சமாக முஸ்தபிசூர் ரஹ்மான், தீபக்சஹர் தூஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

பாராட்டிய ரெய்னா:
அதனால் குஜராத்துக்கு எதிராக பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்த நடப்பு சாம்பியன் சென்னை 2 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியது. முன்னதாக அந்த போட்டியில் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி பேட்டிங் செய்யும் வாய்ப்பை பெறவில்லை. இருப்பினும் விக்கெட் கீப்பராக அசத்திய அவர் விஜய் சங்கர் கொடுத்த கேட்ச்சை பிடித்தது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

டேரில் மிட்சேல் வீசிய 8வது ஓவரின் 3வது பந்தை எதிர்கொண்ட விஜய் சங்கர் எட்ஜ் கொடுத்தார். 2.27 மீட்டர் அகலத்தில் வெறும் 0.60 வினாடிகள் ரியாக்சன் டைமில் வந்த அந்த பந்தை அப்படியே அபாரமாக தாவிய தோனி சிறப்பான கேட்ச் பிடித்து அசத்தினார். கடந்த வருடம் முழங்கால் வலியால் அவதிப்பட்ட அவர் இந்த வருடம் 42 வயதிலும் அப்படி வேகமாக வந்த பந்தை தன்னுடைய சிறப்பான ஃபிட்னஸ் பயன்படுத்தி அபாரமாக பிடித்தது அனைவரது பாராட்டுகளை பெற்றது.

- Advertisement -

குறிப்பாக சுரேஷ் ரெய்னா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில். “புலி இப்போதும் வாழ்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மஹி பாய் எப்போதும் வலுவாக செல்லக் கூடியவர். அவர் தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கக் கூடியவர்” என்று பாராட்டியுள்ளது வைரலாகி வருகிறது. அந்த வகையில் வயதை வரும் நம்பராக்கி அசத்தி வரும் தோனி இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவார் என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகிறது.

இதையும் படிங்க: நல்லவேளை இந்த தோல்வி ஆரம்பத்திலேயே வந்துச்சி.. சி.எஸ்.கே அணிக்கெதிரான தோல்வி குறித்து – சுப்மன் கில் பேட்டி

அதனாலயே சிஎஸ்கே அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை இளம் வீரர் ருதுராஜ் கையில் ஒப்படைத்த தோனி சாதாரண வீரராக விளையாடி வருகிறார். ஆனால் இந்தியாவுக்காக 3 ஐசிசி கோப்பையும், சென்னைக்காக 5 ஐபிஎல் கோப்பைகளையும் கேப்டனாக வென்று கொடுத்து ஏராளமான சாதனைகளை படைத்த அவர் இன்னும் விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகும்.

Advertisement