நல்லவேளை இந்த தோல்வி ஆரம்பத்திலேயே வந்துச்சி.. சி.எஸ்.கே அணிக்கெதிரான தோல்வி குறித்து – சுப்மன் கில் பேட்டி

Gill
- Advertisement -

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 7-வது லீக் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை குவித்தது. சென்னை அணி சார்பாக துவக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா 46 ரன்களையும், ஷிவம் துபே 51 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

குஜராத் அணி சார்பாக ரஷீத் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அதனை தொடர்ந்து 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியினர் 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே குவித்தனர். இதன் காரணமாக சென்னை அணி 63 வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறுகையில் : இந்த போட்டியில் சிஎஸ்கே அணியினர் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்கள். அவர்களுடைய செயல்பாடு அற்புதமாக சிறப்பாக இருந்தது.

- Advertisement -

அதே நேரத்தில் இவ்வளவு பெரிய ஸ்கோரை நாங்கள் துரத்தும்போது பவர் பிளேவில் நன்றாக விளையாட வேண்டியது அவசியம். ஒருவேளை பவர்பிளே சரியாக செல்லவில்லை என்றால் தொடர்ந்து அந்த ரன்களை அடிக்க வேண்டிய கட்டாயத்தில் விளையாட வேண்டிய சூழல் ஏற்படும். அதே போன்று தான் இந்த போட்டியிலும் நடந்தது. டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை 10-15 ரன்கள் வித்தியாசம் தான் வெற்றியை முடிவு செய்யும்.

இதையும் படிங்க : டேவான் கான்வே வந்தாலும் ரச்சின் ரவீந்திராவை டீமை விட்டு தூக்கமுடியாது போலயே – சம்பவம் செய்த ரச்சின்

இந்த தோல்வி இந்த தொடரின் ஆரம்பத்திலேயே வந்ததும் ஒரு சாதகமான விடயம் தான். ஏனெனில் இந்த தொடரின் நடுவிலோ அல்லது கடைசி நேரத்திலோ இது போன்ற தோல்வி ஏற்பட்டால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும். ஒரு கேப்டனாக நான் நிறைய விடயங்களை தற்போது கற்று வருகிறேன். இது ஒரு புது அனுபவமாக இருக்கிறது. குஜராத் அணியை வழிநடத்துவதை நினைத்தால் மிகவும் அற்புதமாக இருக்கிறது என சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement