டேவான் கான்வே வந்தாலும் ரச்சின் ரவீந்திராவை டீமை விட்டு தூக்கமுடியாது போலயே – சம்பவம் செய்த ரச்சின்

RACHIN
- Advertisement -

சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 7-ஆவது லீக் போட்டியானது நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை அணியானது துவக்கத்திலிருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது.

சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக ஷிவம் துபே 51 ரன்களையும், ரச்சின் ரவீந்திரா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் 46 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது :

- Advertisement -

20 ஓவர்களில் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே குவித்ததால் சென்னை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது சென்னை அணியின் துவக்க வீரராக விளையாடிய ரச்சின் ரவீந்திரா 20 பந்துகளை மட்டுமே சந்தித்த வேளையில் :

6 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 46 ரன்கள் குவித்து அசத்தினார். அதிலும் குறிப்பாக பவுண்டர்களில் மட்டுமே 42 ரன்களை சேர்த்த ரச்சின் ரவீந்திரா குஜராத் அணியின் தோல்வியை போட்டியில் ஆரம்பத்திலேயே முடிவு செய்யும் அளவிற்கு ஒரு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

- Advertisement -

கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற மினி ஏலத்தில் சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்ட அவர் டேவான் கான்வேவிற்கு ஏற்பட்ட காயத்தினால் மாற்றுவீரராக தற்போது விளையாடி வருகிறார். ஆனால் அவர் விளையாடிய 2 போட்டிகளிலேயே மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதால் நிச்சயம் இனிவரும் போட்டிகளிலும் சிஎஸ்சி அணியின் துவக்க வீரராக அவரே விளையாட வேண்டும் என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க : அவரோட ஆட்டத்தை மாத்துனது மஹி பாய் தான்.. மேட்ச் அங்கயே எங்க பக்கம் வந்துடுச்சு.. ருதுராஜ் பேட்டி

ஒருவேளை டேவான் கான்வே மீண்டும் உடற்தகுதி பெற்று வந்தாலும் ரச்சின் ரவீந்திராவை அணியில் எப்படியாவது விளையாட வைக்க வேண்டும் என்றும் பலரும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement