அவரோட ஆட்டத்தை மாத்துனது மஹி பாய் தான்.. மேட்ச் அங்கயே எங்க பக்கம் வந்துடுச்சு.. ருதுராஜ் பேட்டி

Ruturaj gaikwad 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் குஜராத்துக்கு எதிராக நடைபெற்ற தங்களுடைய இரண்டாவது லீக் போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் சென்னை வெற்றி பெற்றது. அதனால் கோப்பையை தக்க வைக்கும் பயணத்தில் 2 வெற்றிகளை பெற்று வெற்றி நடை போடும் சென்னை குஜராத்துக்கு புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவரில் 206/6 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் 46, ரச்சின் ரவீந்தரா 46, சிவம் துபே 51 ரன்கள் எடுக்க குஜராத் சார்பில் அதிகபட்சமாக ரசித் கான் 2 விக்கெட்டுகள் எடுத்தார். பின்னர் 207 ரன்களை துரத்திய குஜராத் ஆரம்பம் முதலே தடுமாற்றமாக விளையாடி 143/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 37 ரன்கள் எடுக்க சென்னை சார்பில் அதிகபட்சமாக முஸ்தஃபிஸூர் ரஹ்மான், தீபக் சஹார், துஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

முன்னேறிய சிஎஸ்கே:
அதனால் குஜராத்துக்கு எதிராக ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணியாகவும் சென்னை சாதனை படைத்தது. இந்த வெற்றிக்கு 51 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய சிவம் துபே ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் மற்ற அணிகளில் தடுமாறிய துபே சென்னையில் அசத்துவதற்கு தோனி மற்றும் அணி நிர்வாகம் முக்கிய காரணமாக இருப்பதாக கேப்டன் ருதுராஜ் கூறியுள்ளார்.

அத்துடன் ஃபீல்டிங் துறையில் சிஎஸ்கே நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளதாகவும் தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இன்றைய போட்டி கச்சிதமாக இருந்தது. குஜராத் போன்ற அணிக்கு எதிராக வெற்றி பெற பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய துறைகளில் இது போன்ற செயல்பாடுகள் எங்களுக்கு தேவை. சென்னையின் பிட்ச் எப்படி இருக்கும் என்பது உறுதியாக தெரியாது”

- Advertisement -

“எனவே பேட்டிங் செய்தாலும் பந்து வீசினாலும் நாங்கள் சிறப்பாக செயல்படுவது அவசியம். இம்முறை எங்கள் கையில் விக்கெட்டுகள் இருந்தது கடைசியில் உதவியது. தனிப்பட்ட முறையில் ரச்சின் ரவீந்தரா பவர் பிளே ஓவர்களில் அபாரமாக விளையாடி போட்டியை எங்கள் பக்கம் எடுத்து வந்ததாக நான் கருதினேன். அப்போதிலிருந்தே நாங்கள் போட்டியில் முன்னிலை பெற்றோம்”

இதையும் படிங்க: மற்ற ஐபிஎல் அணிகளை விட சிஎஸ்கே வேற ரகம்.. இங்க எனக்கு அது கிடைப்பதாலேயே அடிக்கிறேன்.. துபே பேட்டி

“ஷிவம் துபே தன்னம்பிக்கையில் அணி நிர்வாகம் மற்றும் மஹி பாய் தனிப்பட்ட முறையில் வேலை செய்துள்ளனர். எனவே அவருடைய தன்னம்பிக்கை தற்போது உச்சமாக இருக்கிறது. எங்களுடைய ஃபீல்டிங் என்னைக் கவர்ந்தது. இந்த வருடம் ஒரு சில எக்ஸ்ட்ரா இளம் வீரர்கள் இருப்பதால் அப்படி இருக்கலாம். ரகானே அற்புதமாக செயல்பட்டார். கடந்த போட்டியிலும் அவர் ஒருபுறம் இருந்து மறுபுறம் ஓடினார். ஃபீல்டிங் எங்களுக்கு பெரிதாக திருந்தி வந்துள்ளது” என்று கூறினார்

Advertisement