மற்ற ஐபிஎல் அணிகளை விட சிஎஸ்கே வேற ரகம்.. இங்க எனக்கு அது கிடைப்பதாலேயே அடிக்கிறேன்.. துபே பேட்டி

Shivam Dube 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 26ஆம் தேதி நடைபெற்ற 7வது லீக் போட்டியில் குஜராத்தை 63 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் சென்னை தோற்கடித்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவரில் 206/6 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் 46, ரச்சின் ரவீந்தரா 46, சிவம் துபே 51 ரன்கள் எடுக்க குஜராத் சார்பில் அதிகபட்சமாக ரசித் கான் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய குஜராத் ஆரம்பம் முதலே தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சென்னையின் தரமான பந்து வீச்சில் 20 ஓவரில் 143/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சன் 37 ரன்கள் எடுக்க சென்னை சார்பில் அதிகபட்சமாக தீபக் சஹார் முஸ்தபிசுர், ரஹ்மான் துசார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

துபேவின் ரகசியம்:
அதனால் குஜராத்துக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணியாக சாதனை படைத்த சென்னை புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. இந்த வெற்றிக்கு அனைத்து வீரர்களும் முக்கிய பங்காற்றிய போதிலும் பேட்டிங்கில் அதிரடியாக விளையாடிய 51 ரன்கள் குவித்த சிவம் துபே ஆட்டநாயகன் விருதை வென்றார்.

பெங்களூரு, ராஜஸ்தான் போன்ற மற்ற அணிகளில் திணறிய அவர் தோனி தலைமையில் சிஎஸ்கே அணிக்கு வந்தது முதல் அபாரமாக விளையாடி கடந்த வருடம் 5வது கோப்பையை வெல்ல உதவினார். குறிப்பாக சிக்ஸர்களை பறக்க விட்டு அதிரடியாக விளையாடும் அவர் சென்னை அணிக்காக அசத்தியதால் இந்தியாவுக்காகவும் கம்பேக் கொடுத்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் மற்ற அணிகளை விட சிஎஸ்கே அணியில் தமக்கு முழுமையான சுதந்திரம் கொடுக்கப்படுவதாக சிவம் துபே கூறியுள்ளார். அதுவே தாம் இப்படி அதிரடியாக விளையாடுவதற்கு உதவுவதாக துபே தெரிவித்துள்ளார். மேலும் ஆரம்ப காலங்களில் பவுன்சர் பந்துகளில் தடுமாறிய தாம் தற்போது அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவிக்கும் துபே அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்த அணி மற்ற அணிகளை விட வித்தியாசமாக உள்ளது. இந்த அணி எனக்கு சுதந்திரம் கொடுக்கிறது”

இதையும் படிங்க: குஜராத்தை 143க்கு சுருட்டிய சிஎஸ்கே.. மும்பையின் சாதனையை உடைத்து டேபிள் டாப்பராக மிரட்டல் வெற்றி

“நானும் அவர்களுக்காக சில போட்டிகளை வென்று கொடுக்க விரும்புகிறேன். நான் அந்த வழியில் வேலை செய்தது எனக்கு உதவுகிறது. எனக்கு எதிராக எதிரணியினர் ஷார்ட் பந்துகளை வீசுவார்கள் என்பது தெரியும். எனவே அதை நான் எதிர்கொள்ள தயாராக இருந்தேன். எங்கள் அணி நிர்வாகம் என்னை அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுவதை விரும்புகின்றனர். நானும் அதை செய்ய விரும்புகிறேன்” என்று கூறினார்.

Advertisement