குஜராத்தை 143க்கு சுருட்டிய சிஎஸ்கே.. மும்பையின் சாதனையை உடைத்து டேபிள் டாப்பராக மிரட்டல் வெற்றி

CSK vs GT 1
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 26ஆம் தேதி நடைபெற்ற 7வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் எதிர்கொண்டது. சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னைக்கு கேப்டன் ருதுராஜ் நிதானமாக விளையாடினார்.

ஆனால் எதிர்ப்புறம் பட்டாசாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா 6 பவுண்டரி 3 சிக்சரை பறக்கவிட்டு 62 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து 46 (20) ரன்கள் விளாசி நல்ல துவக்கத்தை கொடுத்து அவுட்டானார். அப்போது வந்த ரகானே தடுமாறி 12 (12) ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் நிதானமாக விளையாடிய கேப்டன் ருதுராஜூம் 46 (36) ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

சாதனை வெற்றி:
ஆனால் எதிர்ப்புறம் களமிறங்கிய சிவம் துபே ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த சிக்ஸர்களை பறக்க விட்டு ரசிகர்களை கொண்டாட வைத்தார். அதே வேகத்தில் 2 பவுண்டரி 5 சிக்சரை விளாசிய அவர் 51 (23) ரன்களை குவித்து அவுட்டானார். அப்போது வந்த இளம் வீரர் சமீர் ரிஸ்வி கேரியரின் முதல் பந்திலேயே ரசித் கானுக்கு எதிராக சிக்சர் அடித்து 14 (6) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் டேரில் மிட்சேல் 24, ஜடேஜா 7* ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் சென்னை 206/6 ரன்கள் குவித்தது.

குஜராத் சார்பில் அதிகபட்சமாக ரசித் கான் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 207 ரன்களை துரத்திய குஜராத்துக்கு கேப்டன் கில்லை ஆரம்பத்திலேயே 8 ரன்களில் காலி செய்த தீபக் சஹர் அடுத்த ஓவரிலேயே ரித்திமான் சஹாவையும் 21 (17) ரன்களில் அவுட்டாக்கினார். அப்போது வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்ப்புறம் தடுமாறிய விஜய் சங்கர் 12 (12) ரன்களில் மிட்சேல் வேகத்தில் தோனியின் அட்டகாசமான கேட்ச்சால் பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

அடுத்ததாக வந்த டேவிட் மில்லர் 21 (16) ரன்களில் தேஷ்பாண்டே வேகத்தில் ரகானேவின் அபார கேட்ச்சால் அவுட்டானார். அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் மறுபுறம் நிதானமாக விளையாடிய சாய் சுதர்சனிம் 37 (31) ரன்களில் அவுட்டாகி சென்றார். அப்போது கை கொடுக்க வேண்டிய ஓமர்சாய் 11, ராகுல் திவாடியா 6, ரசித் கான் 1 ரன்களில் அவுட்டானதால் 20 ஓவர்களில் 143/8 ரன்கள் மட்டுமே எடுத்த குஜராத் போராடாமலேயே தோற்றது.

அதனால் 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சென்னை 2 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி கோப்பையை தக்க வைக்கும் பயணத்தில் வெற்றி நடை போடுகிறது. அத்துடன் குஜராத்துக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற மும்பையின் சாதனையையும் சென்னை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க: எதுக்கெடுத்தாலும் பாண்டியாவ குத்தம் சொல்லாதீங்க.. அதெல்லாம் நாங்கள் சேந்து தான் செய்றோம்.. பொல்லார்ட் பதிலடி

இதற்கு முன் 2023 சீசனில் குஜராத்தை 27 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை தோற்கடித்ததே முந்தைய சாதனையாகும். அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய சென்னை சார்பில் அதிகபட்சமாக தீபக்சஹார் முஸ்தபிசுர் ரஹ்மான் துசார் தேஷ் பாண்டே தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

Advertisement