எதுக்கெடுத்தாலும் பாண்டியாவ குத்தம் சொல்லாதீங்க.. அதெல்லாம் நாங்கள் சேந்து தான் செய்றோம்.. பொல்லார்ட் பதிலடி

Kieron Pollard
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடைய முதல் போட்டியிலேயே குஜராத்திடம் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக இம்முறை 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை கழற்றிவிட்ட மும்பை ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக அறிவித்தது. அவருடைய தலைமையில் முதல் போட்டியிலேயே கையில் வைத்திருந்த வெற்றியை கடைசி நேரத்தில் சொதப்பிய மும்பை கோட்டை விட்டது.

அதனால் தொடர்ந்து 12வது வருடமாக ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை பரிதாபமாக தோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்கு ஆரம்பத்திலேயே பும்ராவை பயன்படுத்தாமல் பவர்பிளேவில் 2 ஓவர்களை போட்ட பாண்டியா 20 ரன்கள் கொடுத்தது முக்கிய காரணமாக அமைந்தது. அது போக பேட்டிங்கில் கடைசி நேரத்தில் ரசித் கானை எதிர்கொள்வதை தவிர்ப்பதற்காக டிம் டேவிட்டுக்கு பின் பாண்டியா களமிறங்கியதும் தோல்விக்கு காரணமானதாக இர்பான் பதான் விமர்சித்தார்.

- Advertisement -

பொல்லார்ட் ஆதரவு:
அத்துடன் ரோஹித் சர்மாவை மதிக்காமல் பவுண்டரி எல்லைக்கு சென்று ஃபீல்டிங் செய்யுமாறு வற்புறுத்திய பாண்டியாவை மொத்த ரசிகர்களும் சேர்ந்து திட்டி தீர்த்து வருகின்றனர். இந்நிலையில் பும்ராவுக்கு பதிலாக பந்து வீசியது உட்பட பாண்டியா எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுப்பதில்லை என்று மும்பையின் பயிற்சியாளர் கைரன் பொல்லார்ட் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஒரு அணியாக நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டு முடிவெடுக்க வேண்டும். கடந்த சில வருடங்களாக குஜராத் அணிக்காக பாண்டியா புதிய பந்தில் பந்து வீசினார். அங்கே அவர் புதிய பந்தை ஸ்விங் செய்து நன்றாக பந்து வீசினார். எனவே அது எங்களுக்கு புதிதல்ல. அதை இங்கே நாங்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சித்தோம்”

- Advertisement -

“அந்த முடிவில் எந்த தவறும் இருப்பதாக நான் பார்க்கவில்லை. எங்களுடைய அணியில் எந்த முடிவும் தன்னிச்சையாக எடுக்கப்படுவதில்லை. எனவே அது பாண்டியா முடிவு என்று எங்களால் சொல்ல முடியாது. ஒரு அணியாக நாங்கள் திட்டத்தை வைத்துள்ளோம். ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் எங்கே என்ட்ரி கொடுக்க வேண்டும் என்ற செட்டிங்கை பற்றியும் நாங்கள் பேசுவோம். அந்தப் போட்டியில் டாப் ஆர்டர் அதிக நேரம் பேட்டிங் செய்தது”

இதையும் படிங்க: 200 ஸ்ட்ரைக் ரேட்டில்.. பட்டாசு காட்டிய ரவீந்திரா.. சிக்ஸர்களை பொழிந்த துபே.. தல தோனி பெருமைப்பட வைத்த இளம் வீரர்

“கடைசியில் எங்களிடம் 2 பவர் ஹிட்டர்கள் இருந்தனர். சமீப காலங்களில் டிம் டேவிட் ஃபினிஷிங் செய்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பாண்டியா பல வருடங்களாக எங்களுக்கு அதை செய்துள்ளார். எனவே சூழ்நிலைக்கு தகுந்தார் போல் அவர்களில் ஒருவர் களமிறங்குவார்கள். அந்த வகையில் நாங்கள் தான் முடிவுகளை எடுக்கிறோம். அதனால் பாண்டியா அதை செய்தார் இதை செய்தார் என்று சொல்வதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்” எனக் கூறினார்.

Advertisement