200 ஸ்ட்ரைக் ரேட்டில்.. பட்டாசு காட்டிய ரவீந்திரா.. சிக்ஸர்களை பொழிந்த துபே.. தல தோனி பெருமைப்பட வைத்த இளம் வீரர்

CSK vs GT
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 26ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கத்தில் 7வது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய சென்னைக்கு கேப்டன் ருதுராஜ் நிதானமாக விளையாடினார்.

ஆனால் எதிர்ப்புறம் குஜராத் பவுலர்களை பந்தாடிய ரச்சின் ரவீந்தரா 6 பவுண்டரி 3 சிக்சரை பறக்க விட்டார். அந்த வகையில் பவர் பிளே ஓவரில் 230 ஸ்ட்ரைக் ரேட்டில் பட்டாசாக விளையாடிய அவர் 62 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து 46 (20) ரன்கள் குவித்து ரசித் கான் சுழலில் சிக்கினார். அவரைத் தொடர்ந்து வந்த ரகானே சற்று தடுமாற்றமாக விளையாடி 12 (12) ரன்களில் சாய் கிஷோர் சுழலில் ஸ்டம்ப்பிங் முறையில் அவுட்டானார்.

- Advertisement -

மிரட்டிய இளம் வீரர்கள்:
அப்போது வந்த சிவம் துபே களமிறங்கிய உடனே முதல் 2 பந்துகளில் அடுத்தடுத்த சிக்ஸர்களை பறக்க விட்டு ரசிகர்களை கொண்டாட வைத்தார். இருப்பினும் எதிர்புறம் நிதானமாகவே விளையாடிய கேப்டன் ருதுராஜ் 46 (36) ரன்களில் அவுட்டானார். அடுத்ததாக வந்த டேரில் மிட்சேல் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சிவம் துபே 2 பவுண்டரி 5 சிக்சர்களை பறக்க விட்டார்.

அந்த வகையில் தொடர்ந்து அசத்திய அவர் 22 பந்துகளில் அரை சதமடித்து 51 (23) ரகள குவித்து அவுட்டானார். அப்போது வந்த இளம் வீரர் சமீர் ரிஸ்வி தன்னுடைய ஐபிஎல் கேரியரின் முதல் பந்திலேயே ரஷித் கானுக்கு எதிராக சிக்சரை பறக்க விட்டு அட்டகாசமாக துவங்கியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. அதை பெவிலியனில் இருந்து பார்த்த தல தோனி “தமக்கு அடுத்தபடியாக இளம் வீரர்கள் சிஎஸ்கே அணியை தாங்குவதற்கு தயாராக” இருப்பதை நினைத்து பெருமையுடன் புன்னகையுடன் கொடுத்த ரியாக்சன் நெஞ்சை தொடும் வகையில் அமைந்தது.

- Advertisement -

அந்த வகையில் 2 சிக்ஸருடன் ரிஸ்வி 14 (6) ரன்கள் விளாசி அவுட்டானார். இறுதியில் மிட்சேல் 24 (20) ரன்களும் ரவீந்திர ஜடேஜா 7* (3) ரன்களும் எடுத்ததால் 20 ஓவர்களில் சென்னை 206/6 ரன்கள் குவித்து அசத்தியது. குறிப்பாக ரச்சின் ரவீந்தரா, சிவம் துபே ஆகிய இரண்டு வீரர்கள் 200க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கியது சிஎஸ்கே ரசிகர்களை கொண்டாட வைத்தது.

இதையும் படிங்க: 2வது போட்டியிலேயே தோனி எடுக்காத முடிவை எடுத்த ருதுராஜ்.. சிஎஸ்கே வெல்லுமா? பிளேயிங் லெவன் இதோ

மறுபுறம் டாஸ் வென்று சற்று சுமாராகவே செயல்பட்ட குஜராத் சார்பில் அதிகபட்சமாக ரசித் கான் 2 விக்கெட்டுகள் சாய்த்தார். இதைத்தொடர்ந்து 207 ரன்களை துரத்தும் குஜராத்தை கட்டுப்படுத்தி வெற்றி காணும் முனைப்புடன் சிஎஸ்கே பவுலர்கள் பந்து வீசி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement