2வது போட்டியிலேயே தோனி எடுக்காத முடிவை எடுத்த ருதுராஜ்.. சிஎஸ்கே வெல்லுமா? பிளேயிங் லெவன் இதோ

- Advertisement -

கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 26ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் 7வது லீக் போட்டி துவங்கியது. அந்த போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதின. அதில் சென்னை மற்றும் குஜராத் ஆகிய 2 அணிகளுமே தங்களுடைய முதல் போட்டியில் வெற்றியைப் பெற்ற உத்வேகத்துடன் களமிறங்கின.

அத்துடன் ருதுராஜ் கைக்வாட் மற்றும் சுப்மன் கில் ஆகிய இளம் வீரர்கள் எதிரதிர் அணிகளில் முதல் முறையாக கேப்டன்களாக மோதியது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த சூழ்நிலையில் துவங்கிய அப்போட்டியில் குஜராத் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. சென்னை அணியில் மஹீஸ் தீக்ஸனாவுக்கு பதிலாக மதிஷா பதிரனா இம்பேக்ட் வீரராக களமிறங்குவதாக கேப்டன் ருதுராஜ் அறிவித்தார்.

- Advertisement -

அதிரடி முடிவு:
குறிப்பாக கடந்த வருடம் டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி வெற்றிகளில் பங்காற்றிய பதிரனா காயத்தால் முதல் போட்டியில் விளையாடவில்லை. அந்த சூழ்நிலையில் முதல் போட்டியில் அறிமுகமான வங்கதேச வீரர் முஷ்தபிசூர் ரஹ்மான் நான்கு விக்கெட்டுகளை எடுத்து சிஎஸ்கே வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார்.

அதனால் பதிரனா அணிக்குள் வந்தாலும் பெஞ்சில் அமர்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவரை உடனடியாக அணிக்குள் ருதுராஜ் கொண்டு வந்துள்ளது ரசிகர்களுக்கு வியப்பாக அமைந்தது என்று சொல்லலாம். ஏனெனில் பொதுவாக தோனி கேப்டனாக இருக்கும் போது தோல்வியை சந்தித்தாலும் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்ய மாட்டார். அதுவும் கடந்த போட்டியில் வெற்றி பெற்றால் கண்டிப்பாக பிளேயிங் லெவனில் தோனி மாற்றம் செய்யவே மாட்டார்.

- Advertisement -

அந்த சூழ்நிலையில் ருதுராஜ் எடுத்துள்ள இந்த முடிவு சிஎஸ்கே அணிக்கு வெற்றியை கொடுக்குமா என்பதை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மற்ற படி கடந்த போட்டியில் விளையாடிய அனைத்து வீரர்களும் மீண்டும் இந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளனர். மறுபுறம் குஜராத் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று கில் அறிவித்தார்.

இதையும் படிங்க: தோனி மாதிரியான ஃபினிஷர்.. இந்திய கிரிக்கெட்டில் கோலி தான் அந்த புரட்சியை செஞ்சாரு.. பீட்டர்சன் பாராட்டு

குஜராத் அணிக்கு எதிரான சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் இதோ: ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கைக்வாட் (கேப்டன்), அஜிங்க்ய ரகானே, டேரில் மிட்சேல், ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்எஸ் தோனி (கீப்பர்), தீபக் சஹர், துசார் தேஷ்பாண்டே, முஸ்தபிஷூர் ரஹ்மான், மதீஸா பதிரனா

Advertisement