இந்த சீசனோடு ரிட்டயர்டு ஆயிடுங்க.. இல்லனா இதை பண்ணுங்க.. ரோஹித் சர்மாவுக்கு – வீரேந்திர சேவாக் அட்வைஸ்

Sehwag and Rohit
- Advertisement -

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா கடந்த ஆண்டு டி20 உலக கோப்பை முடிந்த கையோடு டி20 வகையிலான போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதனை தொடர்ந்து தற்போது ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் ரோகித் சர்மா நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறார்.

ரோஹித் சர்மாவுக்கு அட்வைஸ் கூறிய விரேந்திர சேவாக் :

குறிப்பாக இந்த சீசனில் தான் இதுவரை விளையாடியுள்ள 6 இன்னிங்ஸ்களில் 82 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ள அவர் மீது அதிகளவு விமர்சனங்கள் எழுந்துள்ளன. நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கூட மிகச் சிறப்பாக துவங்கிய ரோகித் சர்மா போட்டியின் ஆரம்பத்திலேயே மூன்று சிக்ஸர்களை அடித்து இருந்தாலும் 16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

- Advertisement -

எளிதான இலக்கை துரத்திய வேளையில் ரோகித் சர்மா பெரிய ரன் குவிப்பில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவர் இப்படி சொற்ப ரன்களில் மீண்டும் ஆட்டமிழந்தது அவர் மீதிருந்த விமர்சனத்தை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த சீசனோடு ரோகித் சர்மா தானாக முன்வந்து ஓய்வு அறிவிக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் அவருக்கு அட்வைஸ் செய்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ரோகித் சர்மா ஓய்வை அறிவிப்பதற்கான நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். ஏனெனில் ரசிகர்கள் நல்ல நிலையில் இருக்கும்போதே ரோகித் சர்மா போன்ற வீரர் ஓய்வை அறிவித்தால் அது நல்லது. இல்லையெனில் ரசிகர்களே அவரை ஓய்வுபெற வற்புறுத்த துவங்கி விடுவார்கள்.

- Advertisement -

கடந்த 10 ஆண்டுகளில் ரோகித் சர்மா ஒரு முறை மட்டுமே ஐபிஎல் தொடரில் 400 ரன்களுக்கு மேல் சேர்த்திருக்கிறார். எந்த ஒரு சீசனிலும் அவர் 500 முதல் 700 ரன்கள் அடிக்கவில்லை. பவர் பிளேவில் அட்டாக் செய்து விளையாட வேண்டும் என்று அவர் ஆட்டமிழந்து வருகிறார். இதனால் இத்தனை நாட்களாக அவர் கட்டிக் காத்து வந்த லெகசி பாதிக்கப்படும்.

இதையும் படிங்க : இதுக்காக தான் அவரை மும்பை அணியில் வச்சிருக்கோம்.. வில் ஜேக்ஸ் குறித்து புகழ்பாடிய – ஹார்டிக் பாண்டியா

அதனால் அவர் ஓய்வு அறிவிக்க வேண்டும் இல்லையெனில் முதல் 10 பந்துகளை பொறுமையாக விளையாடுமாறு யாராவது அவரிடம் கூற வேண்டும். அதேபோன்று புல் ஷாட் விளையாடாமல் நிதானமாக ஆடினால் தான் அவரால் மீண்டும் பார்மிற்கு வர முடியும் என வீரேந்திர சேவாக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement