இதுக்காக தான் அவரை மும்பை அணியில் வச்சிருக்கோம்.. வில் ஜேக்ஸ் குறித்து புகழ்பாடிய – ஹார்டிக் பாண்டியா

Pandya and Will Jacks
- Advertisement -

ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளால் சரிவை சந்தித்திருந்தாலும் கடைசியாக நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பி உள்ளது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வில் ஜேக்ஸ் இதற்காகத்தான் மும்பை அணியில் இருக்கிறார் : ஹார்டிக் பாண்டியா

அந்த வகையில் நேற்று சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பந்துவீசிய மும்பை அணியானது சன் ரைசர்ஸ் அணியை 162 ரன்களுக்கு சுருட்டியது. அதன் பின்னர் 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 18.1 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது மும்பை அணி சார்பாக பந்துவீச்சில் 3 ஓவர்களை வீசி 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய வில் ஜேக்ஸ் பேட்டிங்கிலும் மூன்றாவது வீரராக களம்புகுந்து 26 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் என 36 ரன்கள் குவித்து அந்த அணியின் வெற்றிக்கு உதவினார்.

இதன்காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்து வில் ஜேக்ஸ் எதிர்பார்த்த அளவு சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தாத வேளையில் நேற்றைய போட்டியில் அவர் சிறப்பாக செயல்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்து வில் ஜேக்ஸ்-ஸின் இந்த செயல்பாடு குறித்து பாராட்டி பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா கூறுகையில் :

- Advertisement -

இந்த காரணத்திற்காக தான் அவரை நாங்கள் அணியில் வைத்திருக்கிறோம். அவருக்கு ஆதரவும் தந்து வருகிறோம். இன்றைய போட்டியில் அவர் சிறப்பாக விளையாடியதில் மகிழ்ச்சி. வில் ஜேக்ஸ் மூன்று வகையான துறையிலும் அசத்தக்கூடிய வீரர். அவர் ஒரு கன் ஃபீல்டர், அதுமட்டுமின்றி போட்டியின் முக்கியமான நேரங்களில் சிறப்பாக பந்து வீசவும் முடியும்.

இதையும் படிங்க : ஆண்ட்ரே ரசலுக்கு அடுத்து ஐ.பி.எல் வரலாற்றில் 2 ஆவது வீரராக டிராவிஸ் ஹெட் நிகழ்த்திய – அசத்தல் சாதனை

அதேபோன்று பேட்டிங்கிலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். அதன் காரணமாகவே அவர் எங்களது அணியில் இருக்கிறார் என ஹார்திக் பாண்டியா புகழ்ந்து பேசினார். மும்பை இந்தியன்ஸ் அணியானது தங்களது அடுத்த லீக் ஆட்டத்தில் ஏப்ரல் 20-ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement