விராட் கோலி நான் பேசிய 3 செகன்ட்லேயே இதற்கு சம்மதித்து விட்டார் – கங்குலி வெளியிட்ட ஆச்சரிய தகவல்

Ganguly
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை டெல்லி மைதானத்தில் நடைபெறுகிறது.

Ind

- Advertisement -

இந்நிலையில் பிசிசிஐயின் புதிய தலைவராக கங்குலி சில தினங்களுக்கு முன்பு பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்றதை அடுத்து 24ம் தேதி உடனடியாக இந்திய அணி கேப்டன் கோலி மற்றும் துணை கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இதர நிர்வாகிகள் அனைவரையும் ஒன்று திரட்டி அவசர கூட்டம் ஒன்றை நடத்தி அணி மேம்பாடு குறித்து கலந்துரையாடினார்.

அதன்பிறகு தற்போது கங்குலி பகலிரவு டெஸ்ட் போட்டி குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார் அதில் கங்குலி கூறியதாவது : 24 ஆம் தேதி அணியின் செயல்பாடு குறித்து நாங்கள் கலந்துரையாடிய போது நான் விராட் கோலியிடம் நாம் ஏன் பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்தகூடாது என்று கேட்டேன். அதற்கு விராட் கோலி சற்றும் தயக்கமின்றி மூன்று செகண்டுகள் கண்டிப்பாக நடத்தலாம் வரும் தொடரிலேயே நாம் பகலிரவு டெஸ்ட் விளையாடுவோம் என்று கோலி சம்மதித்தார்.

Ground

ஆனால் இதுவே தாமதம் என்று நான் நினைக்கிறன். இதற்கு முன்னர் கடந்த ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் அடிலெய்டு போட்டியில் பகலிரவாக டெஸ்ட் போட்டியில் விளையாட சம்மதிக்கவில்லை அது ஏன் என்று தெரியவில்லை. இருப்பினும் இப்போது எடுத்துள்ள முடிவு சரியான முடிவுதான். டெஸ்ட் போட்டியின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கவும் டெஸ்ட் போட்டியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் இந்த பகல் இரவு டெஸ்ட் போட்டி ஒரு படிக்கல்லாக அமையும் என்று கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement