ஐ.சி.சி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியல். மிகப்பெரிய சறுக்கலை சந்தித்த கோலி – விவரம் இதோ

kohli
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் படுதோல்வியை சந்தித்து தொடரில் பின்தங்கியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய கேப்டன் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் முதல் இன்னிங்சில் 11 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 72 ரன்களை மட்டுமே அடித்தார்.

root 1

- Advertisement -

இந்த படுதோல்வியை தொடர்ந்து அவரது கேப்டன்சி மீதும் தற்போது மிகப்பெரிய அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி 13ஆம் தேதி சென்னையில் துவங்குகிறது. இதற்கு முன்னர் தற்போது ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டது. அதில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்திய அணிக்கு எதிராக இந்த முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய ரூட் முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்து அதுமட்டுமின்றி இரண்டாவது இன்னிங்சில் வேகமாக 40 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் காரணமாக இந்த போட்டியில் மொத்தம் 258 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. கேப்டன் கோலி 83 ரன்களை எடுத்தார்.

kohli

இதனால் ஐசிசி வெளியிட்ட பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் 883 புள்ளிகளுடன் ரூட் கோலியை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார். முதலிடத்தில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இருக்கிறார். அவரை தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் இரண்டாவது இடத்திலும், ரூட் மூன்றாவது இடத்திலும், நான்காமிடத்தில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான லாபுஷேன் உள்ளார்.

Kohli 1

டெஸ்ட் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் விராட்கோலி மிகப்பெரிய சரிவை சந்தித்து ஐந்தாவது இடத்திற்கு பின் தங்கியுள்ளார். ஐந்தாம் இடத்தில் இருக்கும் கோலி விரைவில் ரன்களை குவித்து புள்ளிப் பட்டியலில் முன்னேறுவார் என்றாலும் அவர் அடைந்த சறுக்கல் பல ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement