எப்பா ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்க்கே இத்தனை கோடியா? விராட் கோலியின் சொத்து மதிப்பு வெளியீடு – வியக்கும் விவரம் இதோ

Kohli
- Advertisement -

டெல்லியை சேர்ந்த நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த 2008ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற அண்டர்-19 உலகக் கோப்பையை இந்தியாவுக்கு கேப்டனாக வென்று சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஆரம்ப காலங்களில் தடுமாறினாலும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இன்று பேட்டிங் துறையின் முதுகெலும்பாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற 2013க்குப்பின் அவரைப் போலவே அவரது இடத்தில் ரன் மெஷினாக உலகின் டாப் பவுலர்களை எதிர்கொண்டு 25000க்கும் மேற்பட்ட ரன்களை அடித்துள்ள அவர் 34 வயதிலேயே 75 சதங்களை அடித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து நவீன கிரிக்கெட்டின் நாயகனாக போற்றப்படுகிறார்.

அதே போல கேப்டனாக 3 வகையான கிரிக்கெட்டிலும் வெளிநாடுகளில் இந்தியாவுக்கு சில வரலாறு காணாத வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் வெற்றிகரமான ஆசிய டெஸ்ட் கேப்டனாக சாதனை படைத்துள்ளார். மேலும் ஐபிஎல் தொடரிலும் பெங்களூரு அணிக்காக கடந்த 16 வருடங்களாக வெற்றிக்கு போராடி வரும் அவர் அதிக ரன்கள் மற்றும் அதிக சதங்கள் அடித்த வீரராக ஜொலித்து வருகிறார். அதனால் நிறைய இளம் வீரர்களுக்கு ரோல் மாடலாக திகழும் அவருக்கு உலகம் முழுவதிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

- Advertisement -

சொத்து மதிப்பீடு:
அதன் காரணமாக இந்த நவீன யுகத்தில் இன்றியமையாளராக பார்க்கப்படும் சமூக வலைதளங்களில் அவரை ஏராளமானவர்கள் பின்பற்றி வருகிறார்கள். குறிப்பாக சச்சின் டெண்டுல்கர் எம்எஸ் தோனி ஆகியோரை விட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரொனால்டோ, மெஸ்ஸி போன்ற விளையாட்டு வீரர்கள் வரிசையில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள கிரிக்கெட் வீரர் என்ற சாதனையும் அவர் ஏற்கனவே படைத்துள்ளார். அதனால் தற்சமயத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 252 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள அவர் பல்வேறு பிரபல நிறுவனங்களின் விளம்பர தூதராகவும் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இந்தியாவின் உச்சகட்ட நட்சத்திரமாக கருதப்படும் அவருடைய சராசரி சொத்து பற்றிய மதிப்பீடுகள் வெளியாகியுள்ளது. அதில் முதலாவதாக 18க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் விளம்பரத்திற்கு நடித்துள்ள அவர் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் வருடம் ஒன்றுக்கு சுமார் 7.5 – 10 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். அதன் வாயிலாக வருடத்திற்கு 175 கோடிகள் சம்பாதிக்கும் அவர் பாலிவுட் சினிமா நட்சத்திரங்களை விட அந்த பிரிவில் அதிகமாகவே வருமானத்தை ஈட்டுகிறார்.

- Advertisement -

அதை விட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் ஒரே ஒரு பதிவு போடுவதன் வாயிலாக 8.9 கோடிகளை அள்ளும் அவர் ட்விட்டர் பக்கத்தில் ஒரு போஸ்ட் பதிவு செய்வதால் 2.5 கோடிகளை வாங்குகிறார். அத்துடன் மும்பை மற்றும் குருகிராம் ஆகிய இடங்களில் முறையே 34 கோடி மற்றும் 80 கோடி ரூபாய் மதிப்பில் 2 சொகுசு வீடுகளையும் வைத்துள்ள விராட் கோலி 31 உயர்தர பிராண்ட் கார்களை வைத்துள்ளார். அது போக இந்தியாவில் நடைபெற்று வரும் ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கோவா அணியின் உரிமையாளரான விராட் கோலி இந்தியன் சூப்பர் லீக் எனப்படும் டென்னிஸ் தொடரிலும் ப்ரோ மல்யுத்த தொடரிலும் தலா 1 அணியை வைத்துள்ளார்.

இவை அனைத்திற்கும் அடித்தளமாக இந்திய அணிக்கு விளையாடும் விராட் கோலி ஏ பிளஸ் பிரிவில் 7 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார். அதன் வாயிலாக ஒரு டெஸ்ட் போட்டிக்கு 15 லட்சமும் ஒரு ஒருநாள் போட்டிக்கு 6 லட்சமும் ஒரு டி20 போட்டிக்கு 3 லட்சமும் சம்பளமாக பெறும் அவர் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடுவதற்காக வருடத்திற்கு 15 கோடிகளை சம்பளமாக பெறுகிறார்.

இதையும் படிங்க:நான் பண்ணது தப்பு தான். குற்றத்தை ஒப்புக்கொண்ட மொயின் அலி. அபராதம் விதித்த அம்பயர் – என்ன நடந்தது?

அப்படி அனைத்து விதமான வருமானங்களை சேர்த்து வருடத்திற்கு 1050 கோடிகளை விராட் கோலி பெறுவதாக பிரபல நிறுவனம் செய்து வெளியிட்டுள்ளது. இதற்கு முன் கடந்த வருடங்களில் 800, 900 கோடிகளை சம்பாதித்து வந்த அவர் தற்போது தான் முதல் முறையாக 1000 கோடி ரூபாய் என்ற உச்சக்கட்டத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement