நான் பண்ணது தப்பு தான். குற்றத்தை ஒப்புக்கொண்ட மொயின் அலி. அபராதம் விதித்த அம்பயர் – என்ன நடந்தது?

Moeen-Ali
- Advertisement -

இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தங்களது முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து 393 ரன்கள் குவித்திருந்த வேளையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி தங்களது முதல் இன்னிங்சில் 386 ரன்கள் குவித்தது.

Moeen Ali 1

- Advertisement -

பின்னர் 7 ரன்கள் முன்னிலையுடன் தற்போது இங்கிலாந்து அணி தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 28 ரன்கள் குவித்துள்ள வேளையில் தற்போது 35 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியின் போது ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த மொயின் அலி மீண்டும் இங்கிலாந்து அணிக்கு திரும்பி அருமையான கம்பேக் கொடுத்துள்ளார். அப்படி அவர் திரும்பியுள்ள இந்த போட்டியின் முதல் இன்னிங்சிலேயே இரண்டு முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

Moeen Ali 2

அதிலும் குறிப்பாக இரண்டாம் நாள் ஆட்டத்தில் டிராவிஸ் ஹெட் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோரின் முக்கியமான விக்கெட்டை அவர் வீழ்த்தியதினாலே இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா அணியை தடுத்து நிறுத்த முடிந்தது என்று கூறலாம்.

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய போட்டியில் 89-ஆவது ஓவரில் எல்லைக்கோட்டின் அருகே இருந்த மொயின் அலி தனது கைகளில் உலர்த்தும் முகவரையை(ஸ்ப்ரே) பயன்படுத்தியது கேமராவில் சிக்கியது. இதனை கண்ட அம்பயர்கள் மொயின் அலியிடம் குற்றச்சாட்டினை முன்வைத்தனர். அவனும் அதை ஒப்புக்கொண்டதால் பெரிய பாதிப்பிலிருந்து அவர் தப்பினார்.

இதையும் படிங்க : வீடியோ : வரலாறு காணாத ஃபீல்டிங்கை செட் செய்து மேஜிக் நிகழ்த்திய பென் ஸ்டோக்ஸ் – தைரியத்தால் சாதிக்குமா இங்கிலாந்து?

மேலும் தான் உணர்த்தும் முகவரையை விரல்களில் மட்டும் தான் பயன்படுத்தினேன் என்றும் பந்திற்காக எதையும் செயற்கையாக பயன்படுத்தவில்லை என்று விளக்கத்தையும் கொடுத்திருந்தார். இதன் காரணமாக அம்பயர்கள் அவர் மீது பெரிய நடவடிக்கை எதுவும் எடுக்காமல் போட்டி ஊதியத்தில் இருந்து மட்டும் 25% சதவீதத்தை அபராதம் விதித்தனர் அவரும் அதனை ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement