- Advertisement -
உலக கிரிக்கெட்

Virat Kohli : டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்ததன் காரணம் இதுதான் – கோலி பேட்டி

உலக கோப்பை தொடரின் 12ஆவது போட்டி இன்று ஓவல் மைதானத்தில் சற்று நேரத்திற்கு முன் துவங்கியது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். மேலும் இந்த போட்டியில் இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். அதேபோன்று ஆஸ்திரேலிய அணியிடம் எந்த மாற்றமும் இல்லை என்று ஆஸ்திரேலிய கேப்டன் தெரிவித்தார். மேலும் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்ததற்கான காரணத்தையும் கோலி தெரிவித்தார்.

- Advertisement -

அதன்படி கோலி கூறியதாவது : நாங்கள் முதலில் பேட் செய்யவே விரும்பினோம் ஏனென்றால் இந்த மைதானம் முதலில் பேட்டிங் செய்வதற்கு நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன். மேலும் முதலில் பேட்டிங் செய்யும் போது நிறைய ரன்களை அடித்து நாம் நமது இலக்கை நிர்ணயித்தல் அது இரண்டாவதாக ஆடும் அணிக்கு சவாலாக அமையும் வாய்ப்பு உள்ளது. மேலும் நம்மிடம் இப்போது உள்ள பந்து வீச்சு பலம் உலகத்தரம் வாய்ந்தது. எனவே நமது பந்துவீச்சை வைத்து அவர்களுக்கு நிச்சயம் அழுத்தத்தை கொடுக்க முடியும்.

அதுவும் இது போன்ற உலக கோப்பை தொடர்களில் இரண்டாவதாக ஆடும் அணி சற்று பதட்டதுடனே ஆடும் எனவே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது சரியான முடிவு என்றே நான் கருதுகிறேன். நமது அணியின் பேட்டிங் பவுலிங் என இரண்டும் சமமாக உள்ளது. எனவே அணியில் எந்த மாற்றத்தையும் நாங்கள் விரும்பாமல் மீண்டும் அதே அணியுடன் களமிறங்கியுள்ளோம் என்று கோலி கூறினார்.

- Advertisement -
Published by