இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் வெற்றியை பாராட்டி விராட் கோலி – வெளியிட்ட பதிவு

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது ராஞ்சி நகரில் நடைபெற்று முடிந்தது. கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி துவங்கிய இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தங்களது முதல் இன்னிங்சில் 353 ரன்களை குவித்தது. பின்னர் தொடர்ந்து விளையாடிய இந்தியா அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 307 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது.

அதனைத்தொடர்ந்து 46 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 145 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணிக்கு 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

பின்னர் அந்த இலக்கினை துரத்தி விளையாடிய இந்திய அணியானது நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்திருந்த வேளையில் இன்று காலை நான்காம் நாள் ஆட்டம் துவங்கியதும் 84 ரன்கள் எடுத்திருந்தபோது முதல் விக்கெட்டாக ஜெய்ஸ்வாலை இழந்தது.

அதன் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 120 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாற ஆறாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சுப்மன் கில் மற்றும் துருவ் ஜுரேல் ஆகியோரது ஜோடி இறுதி வரை நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை தேடித்தந்தது.

- Advertisement -

இறுதியில் இந்த போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சுப்மன் கில் 52 ரன்களையும், துருவ் ஜுரேல் ஆட்டமிழக்காமல் 39 ரன்களையும் குவித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இப்படி இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி அடைந்ததன் மூலம் இந்த ஐந்து போட்டிகள் போன்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.

இதையும் படிங்க : என்ன நடந்தாலும் இங்கிலாந்துக்கு அந்த வாய்ப்பை குடுக்கக்கூடாதுன்னு நெனச்சே தான் ஆடுன – சுப்மன் கில் பூரிப்பு

இந்நிலையில் இந்திய அணி பெற்ற இந்த வெற்றி குறித்து பாராட்டியுள்ள முன்னணி வீரரான விராட் கோலி அவரது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்ததாவது : மிகச்சிறந்த வெற்றியை நமது இளம் அணி பெற்றுள்ளது, இந்த தொடரில் நமது அணியின் வீரர்கள் நல்ல துணிவு, உறுதிப்பாடு மற்றும் நெகிழ்ச்சி ஆகிய அனைத்தையும் அவர்கள் வெளிக்காட்டியுள்ளனர். அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடப்பட்டது.

Advertisement