என்ன நடந்தாலும் இங்கிலாந்துக்கு அந்த வாய்ப்பை குடுக்கக்கூடாதுன்னு நெனச்சே தான் ஆடுன – சுப்மன் கில் பூரிப்பு

Gill
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. அதோடு இந்த வெற்றியுடன் சேர்த்து இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

அதன்படி ராஞ்சி நகரில் கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வந்த இந்த நான்காவது டெஸ்ட் போட்டியானது இன்று நடைபெற்ற நான்காம் நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியின் கடைசி இன்னிங்ஸ்சில் இந்திய அணிக்கு 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

அந்த இலக்கு எளிய இலக்குதான் என்றாலும் இந்த மைதானத்தில் அது ஒரு சவாலான இலக்காகவே பார்க்கப்பட்டது. இருப்பினும் அதனை சிறப்பாக துரத்தி விளையாடிய இந்திய அணிக்கு சுப்மன் கில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 124 பந்துகளை சந்தித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இந்நிலையில் இந்த இன்னிங்ஸில் தான் இங்கிலாந்து அணிக்கெதிராக விளையாடிய திட்டம் குறித்து பேசியிருந்த சுப்மன் கில் கூறுகையில் : இங்கிலாந்து பவுலர்கள் எங்களுக்கு தொடர்ச்சியாக நெருக்கடி அளித்துக் கொண்டே வந்தார்கள். இருந்தாலும் அதனை சமாளித்து விளையாட வேண்டிய மனநிலையில் நான் இருந்தேன்.

- Advertisement -

அதோடு பவுண்டரிகளை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதற்காக பீல்டர்களை எல்லைக்கோட்டையில் நிறுத்தியதால் நிறைய சிங்கிள்ஸ் ஓட துவங்கினோம். துருவ் ஜுரேல் ஒருபுறம் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது எனக்கும் நல்ல நம்பிக்கையை அளித்தது.

இதையும் படிங்க : 2வது போட்டியிலேயே இந்தியாவை காப்பாற்றிய துருவ் ஜுரேல்.. 22 வருடத்துக்குப் பின் அபார சாதனை

அதோடு இந்த தொடரில் நான் பலமுறை LBW முறையில் ஆட்டமிழந்தேன். எனவே இம்முறை LBW முறையில் மட்டும் ஆட்டமிழந்து விடக்கூடாது என்பதற்காக என்னுடைய கால்களை சரியாக பயன்படுத்தி இறங்கி வந்து பேட்டிங் செய்து ரன்கள் சேர்த்தேன் என சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement