வீடியோ காலில் மகளிர் ஆர்சிபி அணியை வாழ்த்திய விராட் கோலி.. இன்ஸ்டாகிராமில் தெரிவித்த வாழ்த்து செய்தி இதோ

Virat Kohli WPL
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த மகளிர் ஐபிஎல் 2024 தொடரில் பெங்களூரு கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. மார்ச் 17ஆம் தேதி நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த டெல்லியை 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி சுமாராக விளையாடி 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக ஷபாலி 42 ரன்கள் எடுக்க பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக ஸ்ரேயங்கா படேல் 4 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத் தொடர்ந்து 114 ரன்களை துரத்திய பெங்களூருவுக்கு கேப்டன் மந்தனா 31, சோபி டேவின் 32, எலிஸ் பெரி 35* ரிச்சா கோஸ் 17* ரன்கள் எடுத்து 19.3 ஓவரிலேயே வெற்றியை பெற்றுக் கொடுத்தார்கள். அதன் காரணமாக டெல்லி கடந்த வருடத்தை போலவே பரிதாபமாக தோல்வியை சந்தித்து வெளியேறியது.

- Advertisement -

வாழ்த்திய கோலி:
மறுபுறம் இந்த வெற்றியால் முதல் முறையாக மகளிர் ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்று பெங்களூரு சாதனை படைத்துள்ளது. முன்னதாக ஆடவர் தொடர் தோற்றுவிக்கப்பட்ட 2008 முதல் அனில் கும்ப்ளே, விராட் கோலி போன்ற தரமான கேப்டன்கள் தலைமையில் கிறிஸ் கெயில், ஏபி டீ வில்லியர்ஸ் போன்ற மகத்தான வீரர்கள் விளையாடியும் பெங்களூரு அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

குறிப்பாக அழுத்தமான தருணத்தில் சொதப்புவதை வாடிக்கையாக வைத்திருக்கும் அந்த அணி கோப்பையை எதிரணிக்கு தாரை வார்த்து வருகிறது. அந்த சூழ்நிலையில் கடந்த வருடம் தோற்றுவிக்கப்பட்ட மகளிர் ஐபிஎல் தொடரில் மந்தனா தலைமையில் லீக் சுற்றுடன் பெங்களூரு வெளியேறியது. அப்போது ஆடவர் அணியை போலவே மகளிர் ஆர்சிபி அணியும் ஐபிஎல் கோப்பையை வெல்ல மாட்டார்கள் என்ற கிண்டல்கள் எழுந்தன.

- Advertisement -

ஆனால் இம்முறை அதை உடைத்துள்ள ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி மகளிர் அணி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. அந்த சரித்திரத்தை படைத்ததும் ஆர்சிபி அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி உடனடியாக வீடியோ காலில் போன் செய்து மந்தனா தலைமையிலான மகளிர் அணிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 49 ரன்ஸ் 10 விக்கெட்.. ஒரே ஓவரில் நிஜமான ஈ சாலா கப் நம்தே.. டெல்லியை வீழ்த்தி ஆர்சிபி வரலாறு படைத்தது எப்படி?

அத்துடன் “சூப்பர் மகளிர்” என்று இதயம், கோப்பை மற்றும் கைதட்டி பாராட்டும் ஸ்மைலியையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ஆர்சிபி மகளிர் கிரிக்கெட் அணிக்கு விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார். அந்த வகையில் 16 வருட கிண்டல்களை உடைத்து ஈ சாலா கப் கனவு நிஜமானதால் தற்போது ஆர்சிபி ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகிறார்கள். அதே காரணத்தால் ஐபிஎல் 2024 தொடரிலும் நாங்கள் கோப்பையை வெல்வோம் என்று ஆர்சிபி ரசிகர்கள் தெம்பாக பேசத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement