49 ரன்ஸ் 10 விக்கெட்.. ஒரே ஓவரில் நிஜமான ஈ சாலா கப் நம்தே.. டெல்லியை வீழ்த்தி ஆர்சிபி வரலாறு படைத்தது எப்படி?

WPL RCB
- Advertisement -

மகளிர் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி மார்ச் 17ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. அதில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எலிமினேட்டரில் அடைப்பு சாம்பியன் மும்பையில் தோற்கடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு எதிர்கொண்டது. அப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு கேப்டன் மெக் லென்னிங் மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் நன்றாக விளையாடி 64 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். ஆனால் அப்போது ஷபாலி வர்மாவை 44 ரன்களில் அவுட்டாக்கிய ஃசோபி மோலினேக்ஸ் அடுத்ததாக வந்த ஜெமிமாவை டக் அவுட்டாக்கினார். அத்தோடு நிற்காமல் அதற்கு அடுத்ததாக வந்த அலிஸ் கேப்சியையும் டக் அவுட்டாகிய அவர் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள் எடுத்து திருப்பு முனையை உண்டாக்கினார்.

- Advertisement -

பெங்களூரு சாம்பியன்:
அடுத்த சில ஓவரில் மறுபுறம் போராடிய மெக் லென்னிங் 23 ரன்களில் ஸ்ரேயங்கா படேல் சுழலில் சிக்கினார். அதற்கடுத்ததாக வந்த மாரிசன் காப் 8, ஜோனசேன் 3 ரன்களில் ஆசா ஷோபனா பந்துகளில் சீரான இடைவெளிகளில் அவுட்டானார்கள். போதாகுறைக்கு ராதா யாதவ் 12, மின்னு மணி 5, அருந்ததி ரெட்டி 10 என அடுத்ததாக வந்த வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் 18.3 ஓவரில் டெல்லியை 113 ரன்களுக்கு சுருட்டிய பெங்களூரு வெற்றி வாய்ப்பை ஆரம்பத்திலேயே உறுதி செய்தது. குறிப்பாக 64/0 என்ற நிலையில் இருந்த டெல்லியை அடுத்த 49 ரன்களுக்குள் 10 விக்கெட்டுகள் எடுத்து ஆல் அவுட் செய்து அபார கம்பேக் கொடுத்த ஆர்சிபி அணி சார்பில் அதிகபட்சமாக ஸ்ரேயங்கா பட்டேல் 4, சோபி மோலினேக்ஸ் 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

அதைத்தொடர்ந்து 114 என்ற சுலபமான இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு 49 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அனைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த சோஃபி டேவின் 32 (27) ரன்களில் சிகா பாண்டே வேகத்தில் அவுட்டானார். அப்போது வந்த எலிஸ் பெரி நிதானமாக விளையாடிய நிலையில் மறுபுறம் தடுமாறிய கேப்டன் மந்தனா 31 (39) ரன்களில் மின்னு மணி சுழலில் சிக்கினார்.

அதனால் அழுத்தம் ஏற்பட்டாலும் இலக்கு குறைவாக இருந்ததை பயன்படுத்திய எலி பெரி நிதானமாக விளையாடி 35* (37) ரன்கள் எடுத்தார். அவருடன் கடைசியில் ரிச்சா கோஸ் தில்லாக 17* (14) ரன்கள் எடுத்து ஃபினிஷிங் கொடுத்ததால் 19.3 ஓவரில் 115 ரன்கள் எடுத்த பெங்களூரு 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. குறிப்பாக 4 தொடர் தோல்விகளுக்கு பின் முதல் முறையாக டெல்லியை அதுவும் ஃபைனலில் பெங்களூரு தோற்கடித்தது.

- Advertisement -

இதன் வாயிலாக மகளிர் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைத்தது. குறிப்பாக கடந்த வருடம் லீக் சுற்றுடன் வெளியேறியதால் ஆடவர் அணியை போலவே மகளிர் ஆர்சிபி அணியும் கோப்பையை வெல்வதற்கு தகுதியற்றவர்கள் என்ற கிண்டல்கள் எழுந்தன. ஆனால் அந்த 16 வருட கிண்டல்களை இந்த வருடம் மந்தனா தலைமையில் உடைத்துள்ள பெங்களூரு புதிய வரலாறு படைத்துள்ளது.

இதையும் படிங்க: நாட்டுக்காக விளையாடுவதே எனக்கு பெருமை ஆனா.. கஷ்ட காலத்தை பகிர்ந்த பாண்டியா.. வேதனை பேட்டி

அதனால் ஈ சாலா கப் நம்தே என்பது உண்மையானதாக ஆர்சிபி ரசிகர்கள் தற்போது கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் இந்த வெற்றியால் விரைவில் துவங்கும் ஆடவர் ஐபிஎல் தொடரிலும் நாங்கள் சாம்பியன் பட்டம் வெல்வோம் என்று ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாட்டத்தை துவங்கியுள்ளனர். மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பிய டெல்லி கடந்த வருடத்தை போலவே இம்முறையும் ஃபைனலில் தோற்று வெளியேறியது.

Advertisement