நாட்டுக்காக விளையாடுவதே எனக்கு பெருமை ஆனா.. கஷ்ட காலத்தை பகிர்ந்த பாண்டியா.. வேதனை பேட்டி

Hardik Pandya 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து குணமடைந்து விளையாட உள்ளார். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்திய அணியின் முதன்மை ஆல் ரவுண்டராக கருதப்படும் அவர் கடந்த 2023 உலகக் கோப்பையில் காயத்தை சந்தித்தார். அதனால் பாதியிலேயே வெளியேறிய அவர் சுமார் 5 மாதங்கள் காயத்திலிருந்து குணமடைந்து தற்போது ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளார்.

குறிப்பாக குஜராத் அணியில் கேப்டனாக இருந்த அவரை தற்போது மும்பை இந்தியன்ஸ் டிரேடிங் முறையில் வாங்கியுள்ளது. எனவே ரோகித் சர்மாவுக்கு பதிலாக புதிய கேப்டனாக செயல்பட உள்ள பாண்டியா வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றி அலமாரியில் 6வது கோப்பையை அடுக்குவாரா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

- Advertisement -

நாட்டுக்காக பெருமை:
முன்னதாக 2023 உலகக் கோப்பையில் பாண்டியாவுக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற முகமது ஷமி லேசான காயத்துடன் அபாரமாக விளையாடி இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றினார். ஆனால் லேசான காயத்தை சந்தித்த பாண்டியா ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக உடனடியாக வெளியேறி மேற்கொண்டு இந்தியாவுக்காக விளையாடவில்லை என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் எப்போதும் நாட்டுக்காக விளையாடுவது தான் தம்முடைய மிகப்பெரிய பெருமை என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். ஆனால் காயத்துடன் விளையாடினால் அது கேரியரை பாதிக்கும் என்ற சூழ்நிலை ஏற்பட்டதாலேயே உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியதாகவும் பாண்டியா வேதனையுடன் தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“நான் ஒரு தொடருக்கு 2 – 3 மாதங்கள் முன்பாக பயிற்சிகளை துவங்கும் வீரர் கிடையாது. உலகக்கோப்பைக்காக நான் 1 வருடத்திற்கு முன்பே பயிற்சிகளை மேற்கொண்டேன். உலகக் கோப்பைக்காக ஒன்றரை வருடம் முன்பாகவே நான் திட்டங்களை வகுத்து அதற்கு தகுந்தார் போல் வேலை செய்ய தொடங்கினேன். இருப்பினும் துரதிஷ்டவசமாக காயம் ஏற்பட்டது. சிலருக்கு மட்டுமே அதனுடைய உண்மைத்தன்மை தெரியும்”

“இருப்பினும் மீண்டும் உலகக் கோப்பையில் விளையாட நான் முயற்சித்தேன். அதற்காக என்னுடைய கணுக்காலில் 3 வெவ்வேறு பகுதிகளில் ஊசிகளை போட்டுக் கொண்டேன். வலி நிவாரணிகளை எடுத்துக்கொண்டு மீண்டும் இந்திய அணிக்காக கம்பேக் கொடுக்க என்னை நானே தள்ளினேன். ஏனெனில் நாட்டுக்காக விளையாடுவது என்னுடைய மிகப்பெரிய பெருமையாகும்”

“நாட்டுக்காக விளையாடுவதை விட பெரிய பெருமை இருக்க முடியாது. சொந்த மண்ணில் நடந்த உலகக் கோப்பையை என்னுடைய குழந்தை பார்த்தான். எனவே வெற்றி தோல்வியை தாண்டி நான் நாட்டுக்காக விளையாட விரும்பினேன். இருப்பினும் காயம் பெரிதாவதற்கான வாய்ப்பு ஏற்பட்டதால் கடைசியில் உலகக் கோப்பையை தவற விட்டது என்னுடைய இதயத்தில் பாரமாக அமைந்தது” என்று கூறினார்.

Advertisement