திறமைக்கு பரிசாக அர்ஜுனா விருதை வென்ற முகமது ஷமி.. உரிமையுடன் வாழ்த்திய விராட் கோலி

Shami Arjuna Award.jpeg
- Advertisement -

நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ஜனவரி 9ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற இந்திய அரசின் விழாவில் அர்ஜுனா விருதை வென்றார். சொந்த மண்ணில் நடைபெற்ற 2023 ஐசிசி உலகக் கோப்பையில் மொத்தம் 24 விக்கெட்டுகள் எடுத்த அவர் இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றி வெற்றிக்காக முழு மூச்சுடன் போராடினார்.

அந்த சிறப்பான ஆட்டத்தையும் திறமையும் கௌரவிக்கும் வகையில் 2023ஆம் ஆண்டுக்கான இந்திய அரசின் கௌரவ அர்ஜுனா விருது ஷமிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதை இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களின் கையால் கைதட்டல் மற்றும் பாராட்டுகளுக்கு மத்தியில் வாங்கிய முகமது ஷமி தன்னுடைய கேரியரில் மறக்க முடியாத பரிசை பெற்றார்.

- Advertisement -

வாழ்த்திய கிங்:
கடந்த 2013ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 2015 உலகக் கோப்பைக்கு பின் 3 வகையான இந்திய அணியிலும் முதன்மை பவுலராக உருவெடுத்தார். அப்படியே அனுபவத்தால் முன்னேறிய அவர் 2019 உலகக் கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். அதை விட இந்த உலகக் கோப்பையில் முதல் 4 போட்டிகளில் பெஞ்சில் அமர்ந்திருந்த அவர் காயமடைந்த பாண்டியாவுக்கு பதிலாக வாய்ப்பு பெற்றார்.

அந்த வாய்ப்பில் நெருப்பாக பந்து வீசிய அவர் வெறும் 7 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை எடுத்து ஒரு உலகக் கோப்பையில் அதிக விக்கெட்கள் எடுத்த இந்திய பவுலர் என்ற சாதனை படைத்தார். அத்துடன் நியூசிலாந்துக்கு எதிரான செமி ஃபைனலில் 6 விக்கெட்கள் எடுத்த அவர் ஐசிசி உலகக் கோப்பை வரலாற்றின் நாக் அவுட் போட்டியில் 6 விக்கெட்டுகளை எடுத்த முதல் பவுலர் என்ற மாபெரும் உலக சாதனையும் படைத்தார்.

- Advertisement -

அந்த வகையில் நாட்டுக்காக போராடிய ஷமிக்கு தற்போது கிடைத்துள்ள இந்த விருதுக்காக ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வரிசையில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி “வாழ்த்துக்கள் லாலா” என்று ஷமியை மனதார வாழ்த்தியுள்ளார். குறிப்பாக இந்திய அணிக்குள் லாலா என்ற பட்டப் பெயருடன் அழைக்கப்படும் ஷமி குடியரசுத் தலைவரிடம் விருது வாங்கும் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: முதல்ல அதை ஒழுங்கா செய்ங்க.. அப்றம் கேப்டன்ஷிப் தானா கிடைக்கும்.. பாண்டியாவுக்கு கிரண் மோர் அறிவுரை

அந்த வீடியோவின் கீழ் ஷமியின் அன்பான பட்டப் பெயரை உரிமையுடன் பயன்படுத்தி விராட் கோலி அப்படி வாழ்த்தியுள்ளார். இதை தொடர்ந்து உலகக் கோப்பையிலேயே லேசான காயத்துடன் விளையாடிய ஷமி தற்போது அதிலிருந்து குணமடைவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். அதனால் அடுத்ததாக நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவர் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement