முதல்ல அதை ஒழுங்கா செய்ங்க.. அப்றம் கேப்டன்ஷிப் தானா கிடைக்கும்.. பாண்டியாவுக்கு கிரண் மோர் அறிவுரை

Kiran More 2
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டதுடன் விராட் கோலி மீண்டும் தேர்வு செய்யப்பட்டது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2022 டி20 உலகக் கோப்பையில் கடைசியாக விளையாடியிருந்த அவர்கள் அதன் பின் கடந்த ஒன்றரை வருடங்களாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்தனர்.

அந்த சூழ்நிலையில் 2022 டி20 உலகக் கோப்பையில் தோல்வியை சந்திப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த சீனியர்களை கழற்றி விட்டு இம்முறை ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய அணி விளையாடும் என்ற செய்திகள் வெளி வந்தன. அதைத் தொடர்ந்து 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றும் ரோகித் சர்மாவை கழற்றி விட்ட மும்பை பாண்டியாவை தங்களுடைய புதிய கேப்டனாக அறிவித்துள்ளது.

- Advertisement -

முதலில் விளையாடுங்க:
அதனால் 2024 டி20 உலகக் கோப்பையிலும் இந்தியாவின் கேப்டனாக பாண்டியா அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அவர் காயமடைந்து வெளியேறியுள்ளதால் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரோஹித் சர்மா உலகக் கோப்பையிலும் இந்தியாவை வழி நடத்துவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளது.

இந்நிலையில் ஹர்திக் பாண்டியா முதலில் முழுமையாக குணமடைந்து தொடர்ச்சியாக அனைத்து போட்டிகளிலும் விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் கிரண் மோர் தெரிவித்துள்ளார். அதன் பின் இந்தியாவை வழி நடத்தும் பொறுப்பு உங்களுக்கு தாமாகவே கிடைக்கும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்போர்ட்ஸ் 18 நிகழ்ச்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“பாண்டியா முதலில் ஃபிட்டாக வேண்டும். முதலில் அவர் முழுமையாக குணமடைந்து கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். அது தான் முக்கியமாகும். அதை செய்தாலே ஹர்திக் பாண்டியா அனைத்து கட்டங்களையும் நிரப்ப துவங்கி விடுவார். ஏனெனில் ஏற்கனவே அவர் கேப்டனாக இருந்துள்ளார். இப்போதைக்கு அவர் முழுமையாக குணமடைந்து உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு முன்பாக சில போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும்”

இதையும் படிங்க: ஒன்றரை நாளில் முடிந்த மேட்ச்.. கேப் டவுன் மைதானத்துக்கு 2 அதிரடி தண்டனை வழங்கிய ஐசிசி

“ஆனால் எப்போது மீண்டும் அவர் விளையாடத் துவங்குவார் என்பது நமக்கு தெரியாது. ஒருவேளை தற்போது கடுமையாக பயிற்சிகளை செய்து வரும் அவர் ஐபிஎல் தொடரில் விளையாடலாம். அவரைப் போன்ற உலகத்தரம் வாய்ந்த ஆல் ரவுண்டர் அனைத்து அணிக்கும் அவசியமானவர்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தான் தொடருக்கு பின் இந்தியா நேரடியாக 2024 உலகக் கோப்பையில் தான் விளையாட உள்ளது. எனவே பாண்டியாவும் நேரடியாக ஐபிஎல் தொடரில் விளையாடி தம்முடைய ஃபார்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement