அந்த 2 க்ளாஸ் பிளேயர்ஸ்.. தெ.ஆ டெஸ்ட் தொடரில் இந்தியாவின் துருப்பு சீட்டா இருப்பாங்க.. ஸ்ரீசாந்த் கணிப்பு

Sreesanth 2
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற முடிந்த 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 4 – 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. அத்தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட முதன்மை வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களுடன் விளையாடிய இந்தியா 2023 உலகக்கோப்பை ஃபைனலில் தோல்வியை கொடுத்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது.

அதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அங்கு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. அதில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

துருப்புச் சீட்டு:
அதை விட வரலாற்றில் தென்னாப்பிரிக்க மண்ணில் இதுவரை ஒரு முறை கூட இந்தியா தொடரை வென்றதில்லை. எனவே அந்த மோசமான வரலாற்றை இம்முறை மாற்றுவதற்காகவே ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஓய்வெடுக்கும் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற முதன்மை வீரர்கள் கடைசியாக நடைபெற உள்ள தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் களமிறங்குவார்கள் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்நிலையில் தென்னாபிரிக்க மண்ணில் நடைபெற உள்ள அந்த மிகப்பெரிய சவால் மிக்க தொடரில் விராட் கோலி மற்றும் ராகுல் ஆகியோர் துருப்புச் சீட்டு வீரர்களாக செயல்படுவார்கள் என்று ஸ்ரீசாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2010ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1 – 1 (3) என்ற கணக்கில் தோனி தலைமையிலான இந்தியா சமன் செய்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“விராட் கோலி எப்போதும் தன்னுடைய திறமைகளை மற்றவர்களுக்காக இல்லை என்றாலும் தனக்காக நிரூபிக்க விரும்புவார். அவர் பெருமையுடன் விளையாடும் கிரிக்கெட்டர் என்று நினைக்கிறேன். அந்த பெருமையை அவர் அகங்கார வழியில் அல்லாமல் நல்ல வழியில் எடுத்துக் கொள்கிறார். எனவே இந்திய அணிக்காக அந்த பெருமையை பொறுப்பாக எடுத்துக் கொண்டு விராட் கோலி நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன்”

இதையும் படிங்க: விராட் கோலியை நான் கேப்டன் பதவியிலிருந்து தூக்கல.. உண்மையே வேற.. சர்ச்சைகளுக்கு கங்குலி பதில்

“எனவே அந்த தொடரில் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் துருப்புச்சீட்டு வீரர்களாக செயல்படுவார்கள் என்று நான் கருதுகிறேன்” என கூறினார். அந்த வகையில் இப்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடரின் முதல் போட்டி கிறிஸ்மஸ் முடிந்த அடுத்த நாளான டிசம்பர் 26ஆம் தேதி பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement