கேப்டன்னா உங்க இஷ்டத்துக்கு இருப்பீங்களா ? நீங்க பண்றது தப்பு – கோலியை விளாசும் ரசிகர்கள்

Southee-3
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட் சர்ச்சில் இன்று துவங்கியது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியில் இஷாந்த் ஷர்மா அதற்கு பதிலாக உமேஷ் யாதவும், ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜாவும் அணியில் இடம்பெற்றனர்.

INDvsNZ

- Advertisement -

முதல் டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்வியை அடுத்து இந்திய அணி பதிலடி கொடுக்கும் விதமாக விளையாடும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்திய அணி வீரர்கள் இன்றும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அடுத்தடுத்து அவுட் ஆகிய இந்திய அணி வீரர்கள் 242 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர்.

நியூசிலாந்து அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஜேமிசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி வீரர்கள் விக்கெட்டுகளை இழந்து அடுத்தடுத்து தடுமாறிய போது களமிறங்கிய கேப்டன் கோலி பொறுப்புடன் விளையாடுவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் 3 ரன்களில் ஆட்டமிழந்து கோலி வெளியேறினார். மேலும் அவர் அவுட் ஆனபோது கடைசியில் டிஆர்எஸ் உதவியை கோரினார்.

kohli 1

இதுவரை அவரது விக்கெட்டுக்கு 14 முறை டிஆர்எஸ் உதவியை அவர் கோரியுள்ளார். அதில் இரண்டு முறை மட்டுமே அவருக்கு சாதகமாக டிஆர்எஸ் அமைந்துள்ளது. மற்ற அனைத்தும் வீணாகியுள்ளது. கோலியின் இந்த செயலால் கட்டுப்படைந்த ரசிகர்கள் நீங்கள் கேப்டனாக இருந்தாலும் இதுபோன்று செய்வது தவறு வேண்டுமென்றே எந்த ஒரு வாய்ப்பையும் நீங்கள் வீணடிக்கக் கூடாது. டிஆர்எஸ் தேவையான நேரத்தில் அவை ஒவ்வொன்றும் உதவும். எனவே நீங்கள் இதுபோன்று தவறு செய்யக்கூடாது என்றும் கடுமையாக சாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement