WTC Final : இந்த ஒரு போட்டி தான் இருக்கு. கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க. இந்திய வீரர்களை எச்சரித்த – விராட் கோலி

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியானது ஜூன் 7-ம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த இறுதி போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி கடந்த 2013-ஆம் ஆண்டிற்கு பிறகு ஐசிசி கோப்பையை கைப்பற்றவில்லை என்ற குறையை தீர்த்துக்கொள்ள காத்திருக்கிறது. அதேவேளையில் ஆஸ்திரேலிய அணியும் இந்த போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற முனைப்பு காட்டுவதால் இந்த போட்டி தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது.

IND vs AUS

- Advertisement -

இந்நிலையில் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி தற்போது இந்திய வீரர்களை எச்சரிக்கும் வகையில் சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : ஓவல் மைதானம் நிச்சயம் நமக்கு சவாலானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் ஒருபோதும் இங்கு பிளாட் விக்கெட் கிடைக்கப் போவதில்லை. அதனால் பேட்டர்கள் எச்சரிகையாக இருக்க வேண்டும்.

அனைத்து வீரர்களும் கட்டுக்கோப்பான ஒழுக்கமான ஆட்டத்தை கவனத்துடன் வெளிப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப விளையாடும் பக்குவத்தை வீரர்கள் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் இந்த ஆடுகளத்தில் நம்மால் நிலைத்து நின்று விளையாட முடியும்.

Kohli 1

இரண்டு அணிகளுக்குமே சாதகம் இல்லாமல் நடுநிலையான மைதானத்தில் தான் இந்த போட்டி நடைபெறப்போகிறது என்று நினைக்கிறேன். அதிலும் குறிப்பாக ஒரு விடயத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரே ஒரு போட்டி மட்டுமே நம்மிடம் எஞ்சியுள்ளது. இந்த போட்டியில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்களே கோப்பையை வெல்வார்கள்.

- Advertisement -

எனவே கட்டுக்கோப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராக இருங்கள் என்று விராட் கோலி இந்திய வீரர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ஆஸ்திரேலியா அணி எப்போதும் எதிர்த்து விளையாட மிக மிகவும் கடினமான ஒரு அணி. நீங்கள் அவர்களுக்கு ஒரு சின்ன கேப்பை கொடுத்தால் கூட அவர்கள் முழு வேகத்தோடு உடைத்துக் கொண்டு போட்டிக்குள் உள்ளே வருவார்கள். அந்த அளவிற்கு அவர்கள் மிகச் சிறப்பான ஒரு அணி.

இதையும் படிங்க : WTC Final : பிட்ச்ச நேரடியா பாத்துட்டேன், அவர கழற்றி விட்டு அந்த டெம்ப்ளேட் யூஸ் பண்ணுங்க – இந்திய அணிக்கு டிகே கோரிக்கை

எனவே நமது வீரர்கள் ஆஸ்திரேலியா போன்ற ஒரு அணியை வீழ்த்த வேண்டும் என்றால் அதிக திறனை வெளிக்கொணர வேண்டும். நாம் நம்முடைய ஆட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றால் மட்டுமே ஆஸ்திரேலிய அணியை நம்மால் தோற்கடிக்க முடியும் என விராட் கோலி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement