38 ரன் அடிச்சா போதும்.. ஐ.பி.எல் வரலாற்றில் முதல் வீரராக கோலி நிகழ்த்த இருக்கும் சாதனை – விவரம் இதோ

Kohli
- Advertisement -

நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியானது இன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. கோலாகலமாக துவங்கவுள்ள இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோத இருக்கின்றன. இதன் காரணமாக தற்போது இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விராட் கோலி நிகழ்த்த இருக்கும் வரலாற்று சாதனை :

இந்நிலையில் இந்த முதல் போட்டியில் விளையாட இருக்கும் நட்சத்திர வீரரான விராட் கோலி 38 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் ஐபிஎல் தொடரில் முதல் நபராக ஒரு மாபெரும் மைல்கல் சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார். அந்த வகையில் இதுவரை ஆர்சிபி அணிக்காக மட்டுமே விளையாடி வரும் அவர் :

- Advertisement -

252 போட்டிகளில் விளையாடி 8004 ரன்களை குவித்து ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் படைக்கப்போகும் சாதனை யாதெனில் : ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 1053 ரன்களையும், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக 1057 ரன்களையும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 1030 ரன்களையும் அடித்துள்ளார்.

இந்நிலையில் கொல்கத்தா அணிக்கு எதிராக 38 ரன்கள் அடித்தால் கொல்கத்தா அணிக்கு எதிராகவும் 1000 ரன்களை கடப்பார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் வெவ்வேறு நான்கு அணிகளுக்கு எதிராக 1000 ரன்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி நிகழ்த்த காத்திருக்கிறார். கடந்த 2008 ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்காக அறிமுகமான அவர் தொடர்ந்து 17 ஆண்டுகளாக ஒரே அணிக்காக விளையாடி வரும் வீரராகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியுள்ள விராட் கோலி ஐபிஎல் வரலாற்றிலும் ஏகப்பட்ட சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார். அந்த வகையில் ஐபிஎல் தொடரில் 8 சதங்கள், 55 அரை சதங்கள் என 38 ரன்கள் சராசரி உடன் 8004 ரன்களை குவித்துள்ள அவர் இன்னும் சில ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்பதனால் 10000 ரன்களை தொடும் முதல் வீரராகவும் சாதனை நிகழ்த்த வாய்ப்பு இருக்கிறது.

இதையும் படிங்க : இவ்வளவு அனுபவத்துக்கு வெறும் 1.50 கோடி.. கோப்பையை விட ரஹானேவுக்கு இது கஷ்டமா இருக்கும்.. ஆகாஷ் சோப்ரா

அதோடு தற்போது 36 வயதை எட்டியுள்ள அவர் இன்னும் மூன்று நான்கு ஆண்டுகள் விளையாடுவார் என்பதனால் அதிக ஐபிஎல் தொடர்களில் விளையாடிய வீரராகவும் அவர் சாதனை நிகழ்த்த வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement