டி20 கிரிக்கெட்டில் முதல் இந்திய வீரராகவும், உலகளவில் 5 ஆவது வீரராகவும் விராட் கோலி நிகழ்த்த இருக்கும் – மாபெரும் சாதனை

Kohli
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் மார்ச் 28-ஆம் தேதியான இன்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான மிக முக்கியமான போட்டி நடைபெற உள்ளது. இந்த 8-ஆவது லீக் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத இருக்கின்றன.

விராட் கோலி நிகழ்த்த இருக்கும் மாபெரும் சாதனை :

இருபெரும் பலம் வாய்ந்த அணிகள் மோத இருக்கும் இந்த போட்டி ரசிகர்கள் மத்தயில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆர்.சி.பி அணியில் விளையாட இருக்கும் அந்த அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரரான விராட் கோலி இன்றைய ஆட்டத்தில் மாபெரும் சாதனை நிகழ்த்த காத்திருக்கிறார்.

- Advertisement -

அதுகுறித்த தகவல் வெளியாகி தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் அவர் படைக்க இருக்கும் சாதனை யாதெனில் : இதுவரை டி20 கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் விராட் கோலி இந்த போட்டியில் மேலும் 55 ரன்களை குவித்தால் ஒட்டுமொத்தமாக டி20 கிரிக்கெட்டில் 13000 ரன்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.

அதுமட்டும் இன்றி உலக அளவில் இந்த சாதனையை நிகழ்த்தும் ஐந்தாவது வீரராகவும் விராட் கோலி இந்த சாதனையை படைப்பார். இதற்கு முன்னதாக டி20 கிரிக்கெட் போட்டிகளில் கிரிஸ் கெயில் (14,562), அலெக்ஸ் ஹேல்ஸ் (13,610), சோயப் மாலிக் (13,557), கைரன் பொல்லார்டு (13,537) ஆகியோர் 13000 ரன்களை கடந்துள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் நிச்சயம் இந்த போட்டியிலேயே விராட் கோலி இந்த சாதனையை எட்டவேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இதுவரை ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.வி அணிகள் 33 முறை நேருக்கு நேர் விளையாடியுள்ளன.

இதையும் படிங்க : புள்ளிவிவரங்கள் எல்லாம் தேவையில்லை.. விராட் கோலி அதிலும் பெஸ்ட் தான் – தினேஷ் கார்த்திக் கருத்து

அதில் 21 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், 11 முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் வெற்றி பெற்றுள்ளன. இந்த தொடரில் ஏற்கனவே இரு அணிகளும் தங்களது முதல் போட்டியினை வெற்றியுடன் துவங்கியுள்ளதால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்கிற எதிர்பார்த்து அதிகரித்துள்ளது.

Advertisement