புள்ளிவிவரங்கள் எல்லாம் தேவையில்லை.. விராட் கோலி அதிலும் பெஸ்ட் தான் – தினேஷ் கார்த்திக் கருத்து

Karthik and Kohli
- Advertisement -

நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான 18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எட்டாவது லீக் போட்டியானது இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரிட்சை நடத்த காத்திருக்கின்றன. இதன் காரணமாக இரு அணி வீரர்களும் தற்போது தீவிர வலைப்பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய பலம் வாய்ந்த இரண்டு அணிகள் மோதவுள்ளதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விராட் கோலிக்கு எந்த தடுமாற்றமும் இல்லை : தினேஷ் கார்த்திக்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எப்பொழுதுமே சிஎஸ்கே அணியின் ஆதிக்கம் அதிகளவு இருக்கும் என்பதனால் இந்த போட்டியில் ஆர்சிபி அணி எவ்வாறு விளையாடப் போகிறது என்பது குறித்த கேள்வியும் அதிகரித்துள்ளது. பொதுவாக சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதனால் இம்முறையும் சென்னை அணி இந்த மைதானத்தில் தங்களது ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஏற்கனவே அந்த அணியில் ஜடேஜா, அஸ்வின், நூர் அகமது ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். இவர்களை எப்படி பெங்களூரு அணி சமாளிக்கப் போகிறது என்பதும் பெரிய கேள்வியாக உள்ளது. அதேவேளையில் சமீப காலமாகவே விராட் கோலி சுழற்பந்து வீச்சுக்கு எதிராக தடுமாறி வருவதால் சி.எஸ்.கே அணி அவருக்கு எதிராக சுழற்பந்து வீச்சாளர்களை ஆரம்பத்திலேயே கொண்டு வரலாம் என்றும் தெரிகிறது.

இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக் விராட் கோலி ஸ்பின்னர்களுக்கு எதிராக தடுமாறி வருவது குறித்த கேள்விக்கு தனது பதிலை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : விராட் கோலி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகரமாக ஐபிஎல் தொடருக்கு திரும்பியுள்ளார். சமீபகாலமாகவே அவர் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

- Advertisement -

நான் கடந்த கால புள்ளி விவரங்களை கணக்கில் கொள்ள போவதில்லை. தற்போதைக்கு அவர் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இந்திய அணி சார்பாக அதிக ரன்களை குவித்த வீரராக இரண்டாவது இடத்தில் இருக்கிறார். துபாய் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானமாகவே இருந்தது. அங்கும் அவர் சிறப்பாக விளையாடியுள்ளார் எனவே தான் சொல்கிறேன் இந்தமுறை அவர் நிச்சயம் ஐபிஎல் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.

இதையும் படிங்க : 17 வருஷம் ஆச்சு.. நீண்டகால காத்திருப்பை முடிவுக்கு கொண்டுவருமா ஆர்.சி.பி – அதிரப்போகும் சேப்பாக்கம்

மேலும் இப்போது கூட அவர் தன்னுடைய பேட்டிங் ஸ்டைலில் கூடுதலாக ஒரு ஷாட்டை சேர்க்க முயற்சித்து வருகிறார். அந்த அளவிற்கு அவருடைய வேட்கை அதிகமாக காணப்படுகிறது. தொடர்ந்து முன்னேற்றத்தை காண விரும்பும் வீரராக இருக்கும் விராட் கோலி இந்த ஐபிஎல் தொடரில் முன்பு எப்போதும் இல்லாத நம்பிக்கையுடனும், தைரியத்துடனும் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார் என தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement