17 வருஷம் ஆச்சு.. நீண்டகால காத்திருப்பை முடிவுக்கு கொண்டுவருமா ஆர்.சி.பி – அதிரப்போகும் சேப்பாக்கம்

RCB
- Advertisement -

கடந்த மார்ச் 22-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்கிய நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான 18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வரும் இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்து எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

சேப்பாக்கத்தில் சரித்திரத்தை மாற்றுமா ஆர்.சி.பி :

இந்த தொடரில் பங்கேற்றுள்ள பத்து அணிகளும் தற்போது அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடி வருவதால் நாளுக்கு நாள் இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரின் மிக முக்கியமான எட்டாவது லீக் போட்டியானது இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான பெங்களூரு ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றனர். பலம் வாய்ந்த இவ்விரு அணிகளுக்கு இடையேயான இந்த போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எப்போதுமே சிஎஸ்கே மிக பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படும் வேளையில் அந்த மைதானத்தில் கடைசியாக பெங்களூரு அணி 2008 ஆம் ஆண்டு மட்டுமே வெற்றி கண்டுள்ளது. அதனை தொடர்ந்து நடைபெற்ற 17 ஆண்டுகளில் ஒரு முறை கூட சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி அணி சி.எஸ்.கே அணியை வீழ்த்தியதே கிடையாது.

- Advertisement -

எனவே இந்த 17 ஆண்டுகால மோசமான சாதனையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஆர்சிபி அணி இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துமா? என்று பார்க்கலாம். ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இந்த தொடரை வெற்றிகரமாக ஆரம்பித்த ஆர்சிபி அணி சேப்பாக்கம் மைதானத்திலும் தங்களது ஆதிக்கத்தை இன்று வெளிகாட்ட முயற்சிக்கும் என்பதால் இந்த போட்டி ரசிகர்களுக்கு மிகப்பெரிய சுவாரசியத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : என் பேட்டிங்கை முன்னேற தோனி, தவான், பீட்டர்சன்.. இப்படி தான் ஹெல்ப் பண்ணாங்க.. அசுட்டோஸ் பேட்டி

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளுக்கு இடையேயான இந்த 8 ஆவது லீக் ஆட்டமானது மார்ச் 28-ஆம் தேதியான இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7:30 மணியளவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement