கிரிஸ் கெயில் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு அடுத்து விராட் கோலி நிகழ்த்தவுள்ள – மாபெரும் சாதனை

Kohli and Rohit
- Advertisement -

ஆர்.சி.பி அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான விராட் கோலி இந்த ஆண்டு நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் தனது மிகச் சிறப்பான ஃபார்மை வெளிப்படுத்தி ஆர்.சி.பி அணியின் வெற்றிகளில் மிக முக்கிய பங்காற்றி வருகிறார். கடந்த ஆண்டு 2025 ஐ.பி.எல் சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்.சி.பி அணியானது இம்முறை நடப்பு சாம்பியனாக மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. பெங்களூரு அணி இதுவரை தாங்கள் விளையாடியுள்ள 5 போட்டிகளில் 4 வெற்றி மற்றும் ஒரு தோல்வி என 8 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

விராட் கோலி நிகழ்த்த காத்திருக்கும் சாதனை :

இன்னும் சில ஆட்டங்களில் வெற்றி பெறும் பட்சத்தில் பெங்களூரு அணியின் பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பும் பிரகாசமாக மாறும். இந்த தொடரை பொருத்தவரை அந்த அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான விராட் கோலி மிகச் சிறப்பாக விளையாடி வருவது பெங்களூரு அணிக்கு பலம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

- Advertisement -

இதுவரை நடைபெற்ற முடிந்துள்ள 5 போட்டிகளிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இன்று சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருக்கும் 26-வது லீக் போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்றைய டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் விளையாட இருக்கும் அவர் கிரிஸ் கெயில், ரோகித் சர்மா ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது வீரராக மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இதுவரை 272 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி மொத்தமாக 299 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இந்நிலையில் டெல்லி அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் அவர் மேலும் ஒரு சிக்ஸரை அடிக்கும் பட்சத்தில் ஐபிஎல் போட்டிகளில் தனது 300-வது சிக்ஸரை பூர்த்தி செய்வார்.

- Advertisement -

இதையும் படிங்க : கவுதம் கம்பீர், மெக்கல்லம் வரிசையில் மோசமான சாதனையில் இணைந்த அஜின்க்யா ரஹானே – விவரம் இதோ

ஏற்கனவே ஐ.பி.எல் போட்டிகளை பொறுத்த வரை கிரிஸ் கெயில் 357 சிக்ஸர்களுடன் முதலிடத்திலும், ரோஹித் சர்மா 310 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் வேளையில் மூன்றாவது வீரராக 300 சிக்சர்களை அடிக்கும் நபராக விராட் கோலி இந்த பட்டியலில் இணைவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement