கவுதம் கம்பீர், மெக்கல்லம் வரிசையில் மோசமான சாதனையில் இணைந்த அஜின்க்யா ரஹானே – விவரம் இதோ

Ajinkya Rahane
- Advertisement -

அஜின்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இதுவரை தாங்கள் விளையாடிய 6 போட்டிகளில் 5 தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. நேற்று குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 180 ரன்கள் அடித்திருந்தாலும் இந்த போட்டியிலும் கொல்கத்தா அணி தோல்வியையே சந்தித்திருந்தது.

அஜின்க்யா ரஹானே நிகழ்த்திய மோசமான சாதனை :

இந்நிலையில் நேற்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனான அஜின்க்யா ரஹானே முதலில் பேட்டிங் செய்கையில் துவக்க வீரராக களமிறங்கி தான் சந்தித்த முதல் பந்தியிலேயே விக்கெட் ஆனதின் மூலம் கொல்கத்தா அணியின் கேப்டனாக ஒரு மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக முன்னாள் கொல்கத்தா அணியின் கேப்டன்களான கௌதம் கம்பீர், பிரெண்டன் மெக்கல்லம் ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது கேப்டனாக ஒரு மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய மோசமான சாதனை யாதெனில் :

கொல்கத்தா அணிக்காக இதுவரை கேப்டனாக விளையாடி முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டான வீரர்களாக கௌதம் கம்பீர் மற்றும் மெக்கல்லம் ஆகியோர் இருந்த வேளையில் மூன்றாவது கேப்டனாக நேற்று அஜின்க்யா ரஹானே இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : கொல்கத்தா அணிக்காக முதல் இந்திய வீரராக மாபெரும் சாதனையை நிகழ்த்திய – வருண் சக்கரவர்த்தி

நேற்று அஜின்க்யா ரஹானே விளையாடிய இந்த போட்டி அவரது ஒட்டுமொத்த டி20 கரியரில் 300-வது போட்டியாகும். இப்படி டி20 போட்டிகளில் 300-வது ஆட்டத்தில் விளையாடிய 18-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்ற அவர் இந்த போட்டியிலும் தோல்வியே சந்தித்துள்ளதால் அவரது கேப்டன்சி மீது கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement