என்னப்பா சொல்லறீங்க. கோலி வைத்திருக்கும் வாட்ச் இத்தனை லட்சமா ? – பிரமிக்கவைக்கும் தகவல் இதோ

Watch
- Advertisement -

இந்திய அணியின் கேப்டனும், உலகின் நம்பர் ஒன் வீரருமான கோலி அவரது பேட்டிங் மற்றும் கேப்டன்சி என இரண்டிலும் கலக்கி வரும் அவருக்கு உலகளவில் ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை. மேலும் ஆரம்ப காலகட்டத்தில் உடல் பருமனாக இருந்தால் கோலி பிறகு கடினமான உடற் பயிற்சியின் மூலம் உலகின் பிட்டான வீரராகவும் அவர் அறியப்படுகிறார்.

Kohli 3

- Advertisement -

மிகவும் ஸ்டைலிஷான வீரராகவும் தற்போது விளங்கி வருவரும் கோலிக்கு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து வருமானம் தவிர அவருக்கு ஏகப்பட்ட விளம்பரங்கள் பங்கு என உலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் வீரர்களில் ஒருவராக பார்க்கப்படும் கோலி எந்த பொருளை பயன்படுத்துவதாக இருந்தாலும் அதில் கூட ஒரு ஸ்டைலை தனியாக வைத்து இருப்பார்.

அந்த வகையில் தற்போது அவரிடம் உள்ள கலெக்ஷனை பார்த்தால் மலைத்துப் போகும் அளவிற்கு இருக்கும் உடைகள், உபகரணங்கள் மற்றும் வாட்ச்கள் என அனைத்துமே விலை உயர்ந்தவை தான். அதில் நாம் இப்போது பார்க்கப் போவது அவருடைய வாட்சைப் பற்றிதான் கோலி வைத்திருக்கும் ரோலக்ஸ் வாட்ச் டடோனா ரெயின்போ வாட்ச் என்ற வகையைச் சேர்ந்தது.

Watch 2

முற்றிலும் தங்கமுலாம் பூசப்பட்ட இந்த வாட்ச் அதனுடைய டயல் சபையரால் ஆனது. மேலும் இந்த வாட்சிக்குள் வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. அதிலுள்ள எல்லா ஐட்டமும் காஸ்லி என்பதால் இந்த வாட்ச் மிக உயர்ந்தது. தண்ணீர் உள்ளே புகாத அளவிற்கு பாதுகாப்பு அம்சம் கொண்ட இந்த வாட்ச் இன் விலை எவ்வளவு தெரியுமா ?

- Advertisement -

இந்திய மதிப்பில் சுமார் 69 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் இந்த வாட்சில் ஏகப்பட்ட வசதிகள் உள்ளன. உலகின் காஸ்ட்லியான வகைகளில் இதுவும் ஒன்று. இதே மாதிரியான வாட்ச்யைத்தான் தல தோனியும் வைத்துள்ளார். அந்த வாட்ச் விலை தோராயமாக 30 லட்சம் இருக்கும் என்கிறார்கள் அது பேசிக் மாடல் ஆனால் கோலி பயன்படுத்துவது வாட்ச் உயர் ரகமானது.

Watch 1

இது மட்டுமில்லாமல் இந்தியனில் உமேஷ் யாதவ், ஹர்பஜன், ஹார்டிக் பாண்டியா ஆகியோரும் லட்சக்கணக்கான விலை கொண்ட வாட்ச்யை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக இந்திய கிரிக்கெட் அணியின் கடவுளான சச்சின் டெண்டுல்கர் வைத்திருக்கும் வாட்ச் ஒரு கோடி ரூபாயை தாண்டியது. மேலும் அதனை அவர் முக்கியமான வெளியிடங்களுக்கு செல்லும்போது அணிந்து செல்வார் என்ற தகவலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement