ஐபிஎல் கப் டெஸ்ட் வெற்றிக்கு 5 மடங்கு கீழே தான்.. மரியாதையை அதுல சம்பாதிங்க.. இளைஞர்களுக்கு கோலி அட்வைஸ்

Virat Kohli 5
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் பஞ்சாப்பை 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அதனால் ஒரு வழியாக 18 வருடங்கள் கழித்து ஆர்சிபி அணி கோப்பையை வென்றது. அதனால் காலம் காலமாக சந்தித்து வந்த மிகப்பெரிய கிண்டல்கள் மற்றும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த பெங்களூரு அணி தோல்வி சரித்திரத்தை மாற்றி எழுதியுள்ளது.

அதே போல நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 18 வருடங்கள் கழித்து தம்முடைய 18வது ஐபிஎல் தொடரில் முதல் கோப்பையை வென்று சாதனை படைத்தார். இதனால் போராடினால் கண்டிப்பாக ஐபிஎல் கோப்பையை வெல்லலாம் என்பதற்கு விராட் கோலி ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறார் என்று சொல்லலாம். மேலும் 2011 உலகக் கோப்பையை வென்ற அவர் 2013, 2025 சாம்பியன்ஸ் ட்ராபிகளை இந்தியாவுக்காக வென்றார்.

- Advertisement -

டெஸ்ட்க்கு 5 மடங்கு கீழே:

மேலும் 2024 டி20 உலகக் கோப்பையையும் வென்ற அவர் 2008 அண்டர்-19 உலகக் கோப்பையையும் கேப்டனாக இந்தியாவுக்கு வென்றார். அந்த வகையில் விராட் கோலி தம்முடைய கேரியரில் கிட்டத்தட்ட அனைத்து வெற்றிகளையும் சந்தித்துள்ளார் என்றே சொல்லலாம். அதில் 18 வருடங்களாக போராடி வென்ற இந்த ஐபிஎல் கோப்பை ஒரு முக்கிய வெற்றியாக இருக்கும் என்றால் மிகையாகாது.

இந்நிலையில் ஆயிரம் சொன்னாலும் ஐபிஎல் கோப்பை என்பது டெஸ்ட் போட்டியில் கிடைக்கும் வெற்றியை விட 5 மடங்கு கீழே தான் இருக்கும் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். எனவே இளம் வீரர்கள் தங்களுக்கென்று தரத்தையும் பெயரையும் உருவாக்க விரும்பினால் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சாதிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி விராட் கோலி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

கிங் அறிவுரை:

“இந்த தருணம் என்னுடைய கேரியரின் மிகவும் சிறந்த தருணங்களில் ஒன்றாக இருக்கும். ஆனால் இப்போதும் நான் ஐபிஎல் கோப்பையை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு 5 படிகள் கீழே தான் மதிப்பிடுவேன். அந்தளவுக்கு நான் டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்புகிறேன். அதனால் இளம் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை மதிப்புடன் நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்”

இதையும் படிங்க: 2026இல் சிஎஸ்கே, மும்பை செஞ்ச சாதனையை.. செஞ்சு அடிமை யார்ன்னு காட்டுங்க.. ஆர்சிபி டைரக்டர் ஸ்பீச்

“ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் அசத்தினால் உலகில் எங்கே சென்றாலும் அனைவரும் உங்கள் மேலே பார்வையை வைத்து கை கொடுத்து நன்றாக விளையாடினீர்கள் என்று பாராட்டுவார்கள். எனவே உலக கிரிக்கெட்டில் நீங்கள் மரியாதையை சம்பாதிக்க விரும்பினால் டெஸ்ட் கிரிக்கெட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்காக உங்களுடைய இதயத்தையும் உயிரையும் கொடுங்கள். அதைச் செய்தாலே உங்களுக்கு உலக கிரிக்கெட்டின் ஜாம்பவான்களிடம் மரியாதைக் கிடைக்கும்” என்று கூறினார்

Advertisement