2026இல் சிஎஸ்கே, மும்பை செஞ்ச சாதனையை.. செஞ்சு அடிமை யார்ன்னு காட்டுங்க.. ஆர்சிபி டைரக்டர் ஸ்பீச்

Mo Bobat
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இந்த வருடம் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய அந்த அணி இறுதிப் போட்டியில் பஞ்சாப்பை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதனால் 17 வருடங்களாக சந்தித்து வந்த தொடர் தோல்விகளை நிறுத்திய ஆர்சிபி அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

அதே போல 18 வருடங்களாக போராடிய நம்பிக்கை நாயகன் விராட் கோலி ஒரு வழியாக ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்தார். இந்த வெற்றியால் ஆர்சிபி அணி மற்றும் ரசிகர்கள் தங்கள் மீதான கிண்டல்களுக்கு பதிலடியைக் கொடுத்துள்ளார்கள் என்றே சொல்லலாம். அந்த அணியின் இந்த வெற்றிக்கு 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் தரமான வீரர்களை வாங்கியதே முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சென்னை, மும்பை மாதிரி:

இந்நிலையில் முதல் கோப்பையை வென்றது மட்டுமே தங்களுக்கு சவாலாக இருந்ததாக ஆர்சிபி அணியின் இயக்குனர் மோ போபட் தெரிவித்துள்ளார். அதை செய்துள்ள ஆர்சிபி அணி இதே வீரர்களை வைத்து 2026இல் மீண்டும் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் என்று அவர் கூறியுள்ளார். வரலாற்றில் சென்னை (2010, 2011), மும்பை (2019, 2020) அணிகள் மட்டுமே வெற்றிகரமாக சாம்பியன் படத்தை தக்க வைத்து சாதனை படைத்துள்ளன.

அதே சாதனையை பெங்களூரு அணியும் செய்யும் என்று அவர் கூறியுள்ளார். அத்துடன் இனிமேல் தொடர்ந்து கோப்பைகளை வென்று மும்பை, சென்னை போன்ற எதிரணிகளுக்கு ஆர்சிபி என்றால் யாரென்று காட்டுமாறு தங்கள் அணி வீரர்களிடம் போபட் ஸ்பீச் கொடுத்தார். இது பற்றி வெற்றிக்குப் பின் ஆர்சிபி அணியினரிடம் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த வெற்றி உணர்வுக்கு அடிமையாகி விடுங்கள் என்று நான் உங்களிடம் கேட்கிறேன். ஏனெனில் இது ஆரம்பம் மட்டுமே”

- Advertisement -

யார்ன்னு காட்டுங்க:

“இங்கே பல அணிகள் மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. இதற்கு முன் 2 முறை (சென்னை, மும்பை) மட்டுமே நடந்துள்ளது. அடுத்த வருடம் பெங்களூருவில் இறுதிப்போட்டி நடக்கும். அங்கே மீண்டும் சென்று வெல்லுங்கள். இன்று பெற்ற உணர்வுக்கு அடிமையாகுங்கள். ஏனெனில் அந்த உணர்வு தான் அடுத்த வருடம் வெற்றி பெறுவதற்கான பசியைக் கொடுக்கும்”

இதையும் படிங்க: நான் சொன்னதை செய்ஞ்சி காமிச்சிட்டாரு.. இனிமே நீங்க தான் அவருக்கு சப்போர்ட் பண்ணனும் – விராட் கோலி பேச்சு

“அதுவே அடுத்த வருடம் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற பசியைத் தூண்டும். இந்த தருணங்கள் நம்மை உற்சாகப்படுத்தி அடுத்த வருடம் மீண்டும் கோப்பையை வெல்ல வைக்கும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து அடுத்த வருடம் பெங்களூரு கோப்பையை தக்க வைக்கிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement