- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அதுவரை நீங்க தோற்க மாட்டீங்க.. 2027 உ.கோ முன் கழற்றி விட நினைக்கும் பிசிசிஐக்கு விராட் கோலி மெசேஜ்?

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அக்டோபர் 19ஆம் தேதி பெர்த் நகரில் துவங்கும் அத்தொடரில் சுப்மன் கில் தலைமையிலான புதிய இந்திய அணி களமிறங்குகிறது. அவருடைய தலைமையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சாதாரண வீரர்களாக விளையாட உள்ளனர்.

குறிப்பாக ரோஹித் தலைமையில் 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஆகிய 2 ஐசிசி கோப்பைகளை வென்று இந்தியா சாதனை படைத்தது. அதனால் 2027 உலகக் கோப்பையில் அவருடைய தலைமையில் இந்தியா களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது 40 வயதில் அவரால் அசத்த முடியுமா என்று சந்தேகிக்கும் தேர்வுக்குழு இப்போதே கழற்றி விட்டு கில் தலைமையில் புதிய அணியை உருவாக்கத் துவங்கியுள்ளது.

- Advertisement -

கழற்றி விட நினைக்கும் பிசிசிஐ:

அதனால் 2027 உலகக் கோப்பையில் விராட், ரோஹித் விளையாடுவதற்கான வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளது. ஏனெனில் கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் தடுமாற்றமாக விளையாடிய அவர்கள் அடுத்ததாக நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் விளையாடி கம்பேக் கொடுக்க விரும்பினார்கள். அதனாலேயே பல வருடங்கள் கழித்து ரஞ்சிக் கோப்பையில் விளையாடிய அவர்கள் இங்கிலாந்தில் விளையாடத் தயாரானார்கள்.

ஆனால் அதற்கு முன் அவர்களை கழற்றி விட தேர்வுக்குழு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. அடுத்த வாரம் இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து ஓய்வை அறிவித்த ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் அந்த செய்திகளை உண்மையாக்கினர். அதே போல தற்போது 2027 உலகக் கோப்பையில் அவர்களை கழற்றி விட தேர்வுக்குழு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன.

- Advertisement -

கிங் கோலியின் மெசேஜ்:

அது உண்மையாகுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள விராட் கோலி தமது ட்விட்டரில். “விட்டு விடலாம் என்று முடிவெடுக்கும் போது மட்டுமே நீங்கள் உண்மையாக தோற்கும் நேரமாகும்” என்று பதிவிட்டுள்ளார். அதாவது இந்திய அணிக்காக விளையாடுவதை விட்டுவிடலாம் முடிவெடுக்கும் தருணமே தாம் தோல்வியை சந்திக்கும் தருணமாக இருக்கும் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அகார்கர் என்கிட்ட வந்து பேசக்கூட இல்ல.. அப்புறம் எப்படி இப்படி சொல்லலாம் – முகமது ஷமி ஆதங்கம்

ஆனால் தற்போதைய நிலைமையில் தாம் அம்முடிவை எடுக்கவில்லை என்றும் அவர் மறைமுகமாக கூறியுள்ளார். எனவே 2027 உலகக் கோப்பையில் விளையாட விரும்புவதையே விராட் கோலியின் இப்படி மறைமுகமாக பதிவிட்டுள்ளதாக ரசிகர்கள் பேசுகின்றனர். அதனால் தம்மை கழற்றி விட நினைக்கும் பிசிசிஐ, தேர்வுக்குழு, பயிற்சியாளர் ஆகியோருக்கு விராட் கோலி இப்படி மெசேஜ் கொடுத்துள்ளதாக ரசிகர்கள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -