சென்னை வந்ததும் செய்தி சொன்ன கோலி நாளை மறுதினம் முதல் போட்டி – விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நேற்று மும்பை வாங்கடே மைதானத்தில் முடிவடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது.

Cup

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நாளை மறுதினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. டிசம்பர் 15-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டியில் இந்திய அணி சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மைதானத்தில் களமிறங்க உள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தை பொறுத்தவரை கடைசியாக 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி டக்வொர்த் முறைப்படி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் இரண்டு ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கட் போட்டிகள் அங்கு நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. தற்போது இந்திய அணியின் வீரர்களான கோலி, ஜடேஜா ஆகியோர் நேற்று விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

பின்னர் சொகுசு பேருந்து மூலம் தனியார் ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பேருந்தில் ஏறியவுடன் சென்னை வந்து விட்டோம் என்பதை ரசிகர்களுக்கு தெரிவிப்பதற்காக விராட் கோலி ஜடேஜா மற்றும் குல்தீப் ஆகியோர் உடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து சென்னைக்கு வந்துவிட்டேன் என்று ரசிகர்களுக்கு செய்தி சொல்லியுள்ளார். மேலும் டி20 தொடரில் அருமையான பார்மில் இந்த விராட் கோலி ஒருநாள் தொடரிலும் அதனை தொடர்வார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement